• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்தியாவில் தன் முதல் விக்கெட்டை சென்னையில் எடுத்த பும்ரா: இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து திணறல்

இந்தியாவில் தன் முதல் விக்கெட்டை சென்னையில் எடுத்த பும்ரா: இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து திணறல்

டெஸ்ட்

டெஸ்ட்

சென்னையில் டேன் லாரன்ஸை டக்கில் பெவிலியன் அனுப்பி இந்தியாவில் தன் முதல் விக்கெட்டை சென்னை மண்ணில் எடுத்த பும்ரா இதற்கு முன்பு 79 விக்கெட்டுகளை வெளிநாட்டில்தான் எடுத்திருந்தார்..

  • Share this:
    சென்னையில் இன்று தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட உனவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

    ஜோ ரூட் 4 ரன்களுடனும் டாம் சிப்லி 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், இந்தியா தரப்பில் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் கடைசியில் பிரமாதமாக வீசிய பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    உணவு இடைவேளைக்குச் சற்று முன்னர் டேன் லாரன்ஸை அபாரமான இன்ஸ்விங்கரில் எல்.பி. செய்தார், அவர் கிரீசில் இருந்த படியே ஆடியதைக் கவனத்தில் கொண்டு ஒரு பந்தை ஃபுல் லெந்தில் இன்ஸ்விங் செய்ய கால்காப்பில் வாங்கி சிக்கினார், பிளம்ப் எல்.பி. இவர் டக் அவுட் ஆக, முன்னதாக ரோரி பர்ன்ஸ் 33 ரன்களுக்கு உலக பொறுமையுடன் ஆடிவந்தார், அசைப்பது கொஞ்சம் கடினம்தான் என்ற நிலையில் அஸ்வினின் லெந்த் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று தோற்றார், பந்து அவரது கிளவ்வில் பட்டு பந்த் பிடித்த கேட்ச்களின் மிக எளிதான கேட்ச் ஆனது இது. தேவையில்லாத ஷாட்.

    அஸ்வினின் சொந்த பிட்சில் அவருக்கு எதிராக ரிஸ்க் எடுக்கலாமா? ரோரி பர்ன்ஸ் எடுத்தார், திரும்பினார் பெவிலியனை நோக்கி.

    இஷாந்த் சர்மா டைட்டாக வீசினார், மட்டையைக் கடந்து செல்லும் அச்சுறுத்தல் வீச்சு இல்லை, சிராஜை உட்கார வைத்து கோலி பெரும் தவறிழைத்து விட்டார்.

    உணவு இடைவேளை வரை சுந்தருக்குக் கொடுக்கவில்லை, ஷாபாஸ் நதீம் 5 ஓவர

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: