India vs England | ஏமாற்றிய விராட், சுப்மன் கில்... விளாசும் ரோஹித், கைகொடுப்பாரா ரஹானே?

India vs England

ரோஹித் சர்மா அரைசதம் கடந்திருந்த நிலையில் புஜாரா 21 ரன்களில் லீச் சுழலில் சிக்கி வெளியேறினார்.

  • Share this:
    4இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்துள்ளது. ரோஹித் சர்மா அதிரடி விளையாடி அரைசதம் கடந்துள்ளார்.

    இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். மேலும் இந்திய அணியில் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், நதீம் ஆகியோருக்கு பதிலாக முகமது சிராஜ், அக்ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். அதை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா, ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். புஜாரா வழக்கமான தடுப்பாட்டத்தை விளையாடி மற்றொரு முனையில் ரோஹித் அதிரடியாக விளைாயடினார்.

    ரோஹித் சர்மா அரைசதம் கடந்திருந்த நிலையில் புஜாரா 21 ரன்களில் லீச் சுழலில் சிக்கி வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கோலிக்கு ரசிகர்கள் ஆரவாரம் கொடுத்து வரவேற்றனர். ஆனால் கோலி மொயின் அலி பந்துவீச்சில் டக் அவுட்டாகி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

    இந்திய அணி முதல் நாள் இடைவேளையின் போது 103 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது. ரோஹித் சர்மா 80 ரன்கள் மற்றும் ரஹானே 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    Published by:Vijay R
    First published: