ஆடவே முடியாத குழிப் பிட்ச்: குழிக்குள் மட்டை சிக்கி புஜாரா அவுட் ; 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்

ஆடவே முடியாத குழிப் பிட்ச்: குழிக்குள் மட்டை சிக்கி புஜாரா அவுட் ; 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்

புஜாரா ரன் அவுட்.

இந்திய அணி 277 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது, இப்போது டிக்ளேர் செய்தால் கூட இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் 77 ரன்களைக் கூட அடிக்க முடியாது. ஏனெனில் விளையாட முடியாத நிலைக்குப் பிட்ச் சென்று விட்டது.

  • Share this:
சென்னை பிட்ச் ஆடவே முடியாத தன்மைக்குச் சென்று கொண்டிருக்கிறது, இன்னும் ஒரு இன்னிங்ஸ் பாக்கி இருக்கிறது, படுமோசமான பிட்ச் என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்திய அணி 3ம் நாளான இன்று அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 86/5  என்று திணறி வருகிறது.

இன்று புஜாரா 7 ரன்களில் பந்தை மேலேறி வந்து பிளிக் செய்தார் பந்து ஷார்ட் லெக் பீல்டரிடம் சென்றது. ஆலி போப் அதை விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸிடம் த்ரோ செய்ய அவர் ரன் அவுட் செய்தார், மீண்டும் கிரீசுக்குள் வரும்போது புஜாராவின் மட்டை கையில் இருந்து நழுவியது காரணம் அவர் மட்டையை தரையில் ஊன்றிய போது அது குழிக்குள் சிக்கி எடுக்க முடியாமல் போனது காலால் ரீச் செய்யப் பார்த்தார் முடியவில்லை. ரன் அவுட் ஆனார்.

பிட்ச்தான் காரணம் என்கிறார் கவாஸ்கர், மீண்டும் கிரீசுக்குள் திரும்பும் போது மட்டையை நீட்டி ரீச் செய்யும் போது கிரீஸ் அருகேயுள்ள குழியில் மட்டைச் சிக்கியது.

ரோஹித் சர்மாவும் அதிக நேரம் நீடிக்கவில்லை 26 ரன்களில் அவரும் லீச் பந்தில் காலை நீட்டி தடுத்தாடிய போது பந்து மட்டையைக் கடந்து செல்ல இவரது பின்னங்கால் சரியாக கிரீசில் மேல் இருந்தது போக்ஸ் பைல்களை அகற்ற அது அவுட். கிரீசின் மேல் கால் இருந்தால் அவுட், கிரீஸிற்குள் கால் இருக்க வேண்டும்.

ரிஷப் பந்த், ரஹானேவுக்கு முன்னால் இறக்கப்பட்டார். அவரும் ஒரு பவுண்டரி அடித்தார். 8 ரன்களில் லீச் பந்தை மேலேறி வந்து சிக்ஸ் அடிக்க முயன்றார் பந்து சிக்கவில்லை, ஸ்டம்ப்டு ஆனார், அவரும் மீண்டும் கிரீசுக்குள் திரும்பும் போது குழிப்பிட்ச்சில் மட்டை சிக்கியது. பேட்ஸ்மெனின் மட்டை குழியில் சிக்கும் அளவுக்கு பிட்ச் இருக்கிறது என்றால் இந்தப் பிட்சில் இங்கிலாந்து 2வது இன்னிங்ஸை ஆடினால் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கு ஒரு துர்சொப்பனமாகவே மாறியுள்ளது.

இப்போது ரஹானே 2 புல்டாஸ் பவுண்டரிகளுடன் 10 ரன்களில் சற்று முன் மொயின் அலி பந்தில் வெளியேறினார்.  கேப்டன் விராட் கோலி 31 பந்துகளில் 5 ரன்களுடன் கடுமையாகத் திணறி வருகிறார்.

இந்திய அணி 277 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது, இப்போது டிக்ளேர் செய்தால் கூட இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் 77 ரன்களைக் கூட அடிக்க முடியாது. ஏனெனில் விளையாட முடியாத நிலைக்குப் பிட்ச் சென்று விட்டது.

இங்கிலாந்து அணி டாம் பெஸ்ஸை உட்கார வைத்ததை நினைத்து உண்மையில் வருந்தும்.
Published by:Muthukumar
First published: