ஆளை அடிக்கும் ஜோப்ரா ஆர்ச்சர்: அஸ்வினை காயமாக்கி தொடரிலிருந்தே வெளியேற்ற முயற்சி

அஸ்வின்.

இப்போது ஆர்ச்சரை வைத்து அஸ்வினை காயப்படுத்தி விட்டால் அடுத்தடுத்த போட்டிகளுக்கு அஸ்வின் அச்சுறுத்தல் இருக்காது என்று இங்கிலாந்து திட்டமிடுவது போல் தெரிகிறது.

 • Last Updated :
 • Share this:
  சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை எடுத்து தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராடி வருகிறது. இந்நிலையில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வினை அடித்துக் காயப்படுத்தி உட்கார வைக்கலாம் என்ற இங்கிலாந்தின் திட்டத்தில் அவருக்கு தொடர்ச்சியாக பவுன்சரை வீசி வருகிறார் ஜோப்ரா ஆர்ச்சர்.

  5ம் நாள் உணவு இடைவேளையின் போது அஸ்வின் 2 ரன்களுடனும் கேப்டன் விராட் கோலி 51 பந்துகளில் 45 ரன்களுடன் ஆடி வருகின்றனர்.

  இன்று காலை புஜாரா முதல்ல் 15 ரன்களில் ஜேக் லீச்சின் அருமையான பந்துக்கு ஸ்டோக்ஸிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

  ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆக்ரோஷமான ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சில் அரைசதம் அடித்து அபாரமாக ஆடிவந்த ஷுப்மன் கில்லின் ஸ்டம்பைப் பறக்க விட்டதோடு, அதே ஓவரில் ரஹானேவின் ஸ்டம்பையும் ரிவர்ஸ் ஸ்விங்கில் பறக்க விட்டார்.

  அதோடு விட்டுவிடாமல் அபாய வீரர் ரிஷப் பந்த், இவருக்காகவே நிறுத்தி வைக்கப்பட்டது போலிருந்த ஷார்ட் கவர் பீல்டர் கையில் நேராக கேட்ச் கொடுத்து 11 ரன்களில் வெளியேறினார். ஆண்டர்சனின் இந்தப் பந்து நேர் பந்து, ஃபுல் லெந்த் பந்து ஆனால் கொஞ்சம் நின்று வந்தது போல் இருந்தது, பந்த்தினால் ஷாட்டை தரையில் ஆடுமாறு கட்டுப்படுத்த முடியவில்லை நேராக கையில் போய் உட்கார்ந்தது.

  முதல் இன்னிங்ஸ் நாயகனான வாஷிங்டன் சுந்தர் 5 பந்துகள்தான் தாக்குப் பிடித்தார், பெஸ் வீசிய ஆஃப் ஸ்பின் பந்தை சரியாகவே பேக்புட் சென்று ஆடினார், ஆனால் ஆஃப் ஸ்டம்பைக் கவர் செய்து விட்டு பந்தை ஏன் தொட வேண்டும்? லேசான எட்ஜ் ஆகி கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார்.

  117/6லிருந்து அஸ்வின், கோலி 144க்குக் கொண்டு சென்றுள்ளனர். இதில் ஜோப்ரா ஆர்ச்சர் பவுலிங் வீச வந்தவுடன் அஸ்வினுக்கு பவுன்சர்களாக வீசினார். ஒரு பந்து ஹேண்டிலோடு சேர்த்து இடது கையைப் பதம் பார்த்தது. ஒரு பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே சென்றது விட்டு விட்டார் அஸ்வின், ஆனால் மீண்டும் ஷார்ட் ரைசிங் பந்தையே அஸ்வினுக்கு வீசினார். இந்த முறை வலது கை ரிஸ்ட் அடி வாங்கியது.

  களத்துக்கு உடற்பயிற்சி மருத்துவர் வந்தார். மருந்து அடித்து விட்டு கூடுதல் பாதுகாப்பு உறையை அஸ்வின் அணிந்து கொண்டார்.

  இவ்வளவு நடந்தும் மீண்டும் அடுத்த பந்தே பயங்கர பவுன்சரை வீசினார், அஸ்வின் குனிய முயன்றார் ஆனால் பந்து ஹெல்மெட்டின் முன் பகுதியை தாக்கியது. மீண்டும் பிசியோ வந்து கன்கஷன் டெஸ்ட் நடத்தினார். ஆனால் மீண்டும் ஆடத்தொடங்கினார் அஸ்வின்.

  டெய்ல் எண்டர்களுக்கு பவுன்சர்களை வீசி காயப்படுத்தும் உத்தியை முன்பு மே.இ.தீவுகள் கையாண்டது, இப்போது ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு எதிராக அங்கு சென்ற போது கையாண்டது, அதில்தான் ஜடேஜா காயமடைந்தார்.

  இப்போது ஆர்ச்சரை வைத்து அஸ்வினை காயப்படுத்தி விட்டால் அடுத்தடுத்த போட்டிகளுக்கு அஸ்வின் அச்சுறுத்தல் இருக்காது என்று இங்கிலாந்து திட்டமிடுவது போல் தெரிகிறது.
  Published by:Muthukumar
  First published: