அஸ்வினின் வித்தியாசமான இரட்டைச் சதம்: சாதனைத்துளிகளுடன் சென்னை டெஸ்ட்டில் இந்தியா ஆதிக்கம்

அஸ்வினின் வித்தியாசமான இரட்டைச் சதம்: சாதனைத்துளிகளுடன் சென்னை டெஸ்ட்டில் இந்தியா ஆதிக்கம்

அஸ்வின் வித்தியாச இரட்டைச் சதம்.

குழிபிட்ச் ஆக இருந்தாலும் அஸ்வினின் பந்து வீச்சை பாராட்டாமல் இருக்க முடியாது, அவரது பல தினுசுகளான பந்து வீச்சு, திசை, வேகத்தில் கூடுதல் குறைவு, ட்ரிப்ட், பந்து உள்ளே வந்து வெளியே ஸ்பின் ஆதல் அதே இடத்தில் பிட்ச் ஆகி நேரே செல்லுதல், ரவுண்ட் த விக்கெட்டில் இடது கை, வலது கை பேட்ஸ்மென்களை குழப்புவது என்று ஜித்தனாக வீசினார் அஸ்வின்.

 • Share this:
  சென்னை டெஸ்ட் போட்டியில் 2ம் நாளான நேற்று இந்திய அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழகக் இங்கிலாந்து அணி அபாரக் குழிப்பிட்சில் அபார அஸ்வினின் சுழலில் சிக்கி 134 ரன்களுக்குச் சுருண்டது. அஸ்வின் 43 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அக்சர் படேல், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

  195 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சைத் தொடங்கிய இந்தியா சுப்மன் கில் (14) விக்கெட்டை இழந்து ஆட்ட முடிவில் 54 ரன்கள் எடுத்துள்ளது.

  ரோஹித் சர்மா 25 ரன்களுடனும் புஜாரா 7 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.

  நேற்று அஸ்வின் பந்து வீச்சில் வித்தியாசமான இரட்டைச் சதம் அடித்தார். இடது கை பேட்ஸ்மென்கள் விக்கெட்டுகளை மட்டும் 200 முறை வீழ்த்தி அஸ்வின் சாதனை புரிந்துள்ளார், இது தனித்துவ சாதனை.

  அவர் எடுத்திருக்கும் 391 விக்கெட்டுகளில் 200 விக்கெட்டுகள் இடது கை பேட்ஸ்மென்கள் என்பதில் இவர்தான் முதல். இவருக்கு அடுத்த இடத்தில் அதிக இடது கை பேட்ஸ்மென்களை அவுட் ஆக்கிய இடத்தில் முரளிதரன் இருக்கிறார். 800 விக்கெட்டுகளில் 191 விக்கெட்டுகளை இவர் இடது கை வீரர்களை வீழ்த்தியுள்ளார். இடது கை வீரர்களுக்கு எதிராக அஸ்வின் 19.55 என்ற சராசரி வைத்துள்ளார்.

  அதே போல் இந்தியாவில் மட்டும் அஸ்வின் 268 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்தியாவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதில் 350 என்று கும்ப்ளே முதலிடம் வகிக்கிறார்.

  265 விக்கெட்டுகள் எடுத்த ஹர்பஜனை அஸ்வின் கடந்து விட்டார். இந்தியாவில் அஸ்வினின் பவுலிங் சராசரி 22.54. நேற்று அவர் எடுத்த 5 விக்கெட்டுகள் என்பது இந்தியாவில் 23வது 5 விக்கெட்டுகளாகும்.

  134 ரன்கள் என்பது இந்தியாவில் இங்கிலாந்தின் 2-வது குறைந்த ரன் எண்ணிக்கையாகும். 1981- 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதுதான் இங்கிலாந்தின் ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கையாகும் ஆனால் மும்பையில் அன்று இங்கிலாந்தைப் பதம் பார்த்தது கபில்தேவ், மதன்லால். இருவரும் தலா 5 விக்கெட்டுகள்.

  பென் ஃபோக்ஸ் 42 நாட் அவுட் என்று நேற்று முடிந்தார். ஆசியாவில் அவரது சராசரி 79.75 ஆகும். ஒரு சதமும் ஒரு அரைசதமும் எடுத்துள்ளார்.

  இந்தியாவின் முதல் இன்னிங்சில் 4 வீரர்கள் டக் அடித்தனர். இது 9வது முறையாகும். 2008-ல் அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 வீரர்கள் டக் அடித்தனர், அதன் பிறகு இப்போது சென்னையில் 4 வீரர்கள் டக் அவுட் ஆகியுள்ளனர்.

  குழிபிட்ச் ஆக இருந்தாலும் அஸ்வினின் பந்து வீச்சை பாராட்டாமல் இருக்க முடியாது, அவரது பல தினுசுகளான பந்து வீச்சு, திசை, வேகத்தில் கூடுதல் குறைவு, ட்ரிப்ட், பந்து உள்ளே வந்து வெளியே ஸ்பின் ஆதல் அதே இடத்தில் பிட்ச் ஆகி நேரே செல்லுதல், ரவுண்ட் த விக்கெட்டில் இடது கை, வலது கை பேட்ஸ்மென்களை குழப்புவது என்று ஜித்தனாக வீசினார் அஸ்வின்.
  Published by:Muthukumar
  First published: