ஒரே ஓவரில் ஷுப்மன் கில், ரஹானே ஸ்டம்புகளை பறக்க விட்ட ஆண்டர்சன் - இந்தியா கடும் திணறல்

ஜேம்ஸ் ஆண்டர்சன். 2 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் சாய்த்தார். | சென்னை டெஸ்ட் இந்தியா திணறல்

ஆண்டர்சன் வீசிய ரிவர்ஸ் ஸ்விங் பந்து ஷுப்மன் கில்லின் மட்டை, கால்காப்புக்குள் புகுந்து ஸ்டம்பைத் தாக்க ஸ்டம்ப் வண்டிச்சக்கரம் போல் சுழன்று சில அடிகள் தள்ளிப் போய் விழுந்தது.

  • Share this:
சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 420 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டி வருகிறது. சற்று முன் வரை இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.

ஷுப்மன் கில் 81 பந்துகளில் அரைசதம் கண்டு ஆண்டர்சன் வீசிய அபாரமான ரிவர்ஸ் ஸ்விங்குக்கு உள்ளே வந்த பந்தின் லைனை தவறாக ஆட மட்டையை கடந்து ஸ்டம்ப் வண்டிச்சக்கரம் போல் சுழன்று சில அடி தள்ளிப்போய் விழுந்தது.

பிரமாதமான லெந்த் அருமையான ஸ்விங், முன் காலை இன்னும் கொஞ்சம் தள்ளிப்போட்டிருந்தால் ஒருவேளை எல்.பி.அப்பீல் ஆகி நிராகரிக்கப்பட்டிருக்கலாம். காலை முன்னால் நீட்டாததால் பந்து மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்து ஸ்டம்பை பதம் பார்க்க ஸ்டம்ப் நடந்துபோய் சில அடிகள் தள்ளி விழுந்தது.

முன்னதாக புஜாரா 15 ரன்களில் ஜாக் லீச்சின் பந்து ஒன்று மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி திரும்ப அவர் அதை ஆடித்தான் ஆகவேண்டும் ஆடினார் எட்ஜ் ஆனது பென் ஸ்டோக்ஸ் நல்ல கேட்சை எடுத்தார்.

ஷுப்மன் கில் ஆக்ரோஷமாக ஆடினார். பிரமாதமான பிளிக் ஷாட், ஆன் ட்ரைவ், ஆஃப் டிரைவ் என்று அசத்தியதோடு டாம் பெஸ் பந்தை மேலேறி வந்து லாங் ஆனில் பெரிய சிக்சரை விளாசினார். அரைசதம் அடித்து முடித்தவுடன் ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சனைக் கொண்டு வந்தார்.

ஆண்டர்சன் வீசிய ரிவர்ஸ் ஸ்விங் பந்து ஷுப்மன் கில்லின் மட்டை, கால்காப்புக்குள் புகுந்து ஸ்டம்பைத் தாக்க ஸ்டம்ப் வண்டிச்சக்கரம் போல் சுழன்று சில அடிகள் தள்ளிப் போய் விழுந்தது.

அதே ஓவரில் ரஹானே இறங்கி ஒரு எல்.பி. அப்பீலில் பெரிய அளவில் தப்பினார், அது உண்மையில் பிளம்ப் ஆனால் களநடுவர் நாட் அவுட் என்றதால் அதே தீர்ப்பையே 3ம் நடுவரும் ஏற்றுக் கொண்டார்.

ஆனால் அடுத்த பந்தே மீண்டும் அதே ரிவர்ஸ் ஸ்விங் ரஹானே கடந்த பந்து போல் காலை கொண்டு வரவில்லை, பந்து உள்ளே புகுந்தது ஸ்டம்ப் நடந்து சென்று சில அடிகள் தள்ளிப் போய் விழுந்தது.

இப்போது விராட் கோலி 12 ரன்களுடனும் ரிஷப் பந்த் 6 ரன்களுடனும் ஆடிவருகின்றனர், இந்திய அணி 98/4 என்று திணறி வருகிறது.

ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் ஜாக் லீச் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
Published by:Muthukumar
First published: