2-ம் நாளில் சேப்பாக்கத்தில் ரிஷப் பந்த் களைக்கட்டுவாரா? - ரோஹித் சர்மாவின் மாஸ்டர் கிளாஸ்

2-ம் நாளில் சேப்பாக்கத்தில் ரிஷப் பந்த் களைக்கட்டுவாரா? - ரோஹித் சர்மாவின் மாஸ்டர் கிளாஸ்

ரோஹித் சர்மா

பிட்ச் செய்யும் வேலைகளைப் பார்த்தால் அக்சர், அஸ்வின், குல்தீப் யாதவ்வை இங்கிலாந்து சமாளிப்பது மிக மிகக் கடினம் என்றே தெரிகிறது. இந்தியா 300/6.

  • Share this:
சேப்பாக்கம் பிட்ச் நேற்றே தண்ணி லாரி சென்றது போல் ஆகிவிட்டது. பந்துகள் ஒரு சில இடங்களில் பிட்ச் ஆனால் எகிறி திரும்புகிறது. அதிர்ஷ்டவசமாக டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட் செய்ய முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 300/6 என்று உள்ளது.

ரிஷப் பந்த் 5 பவுண்டரிகள் 1 சிச்கருடன் இங்கிலாந்து வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறார், இன்னொரு முனையில் அக்சர் படேல் 5 ரன்களில் உள்ளார்.

இந்தியா 400 ரன்களை எடுத்து விட்டால் இங்கிலாந்துக்கு ஒருவேளை 3 இன்னிங்ஸ்கள் தேவைப்படலாம். பிட்ச் அந்த லட்சணத்தில்தான் உள்ளது.

ஒரு முனையில் கோலி உட்பட அனைவரும் திணறி வருகையில் ரோஹித் சர்மா, சேவாக் பாணியில் அடித்துக் கொண்டே இருந்தார், அதுவும் பென் ஸ்டோக்ஸை அடித்த சிக்சரை மறக்க முடியாது, அதே போல் ஸ்பின்னர்களை ஸ்வீப் ஆடியே காலி செய்தார்.

விராட் கோலி முதல் பந்திலிருந்தே பந்துகள் திரும்பும் பிட்ச் வேண்டும் என்றார். கொடுத்தனர், அவரது உத்தரவு அவரையே சாப்பிட்டு விட்டது. 5 பந்துகள் தாக்குப் பிடிக்க முடியவில்லை டக் அவுட் ஆனார். இவரி இனி சச்சின் டெண்டுல்கர், விவ் ரிச்சர்ட்ஸுடன் ஒப்பிடுவதைத் தவிர்த்தால் நல்லது.

ஜாக் லீச் அவ்வப்போது எட்ஜ் எடுக்க வைத்தார், பீட்டன் செய்தார் மாறாக மொயின் அலி ஓவருக்கு 4 ரன்களுக்கும் மேல் கொடுத்ததில் ஜோ ரூட்டின் திட்டங்கள் பின்னடைவு கண்டன. ரோஹித் சர்மா 90 ரன்களிலிருந்து கொஞ்சம் திணறினார். ஆனால் அதற்கு முன்பாக ஆக்ரோஷமாக ஆடினார் 78 பந்துகளில் 80 ரன்களை விளாசினார். இறங்கி வந்து ஸ்பின்னர்களை விளாசினார்.

ரஹானேவும் எம்.சி.ஜி சதத்திற்கு பிறகு அரைசதம் கண்டார். 9 அபாராமான பவுண்டரிகளுடன் அவர் 67 ரன்கள் எடுத்த நிலையில் தேவையில்லாமல் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே குத்தி உள்ளே திரும்பும் பந்தை ஸ்வீப் ஆட முயன்று பவுல்டு ஆனார். மொயின் அலி மீண்டும் விக்கெட் பக்கம் திரும்பினார். அஸ்வின் விக்கெட்டை ரூட் வீழ்த்தினார்..

4வது விக்கெட்டுக்காக ரஹானே, ரோஹித் சர்மா 162 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சர்மா 231 பந்துகளில் 161 ரன்கள் எடுத்து லீச் பந்தை ஸ்வீப் ஷாட்டில் நேராக டீப் ஸ்கொயர்லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரிஷப் பந்த் ஆக்ரோஷம் காட்டி வருகிறார், இன்று 2ம் நாள் ஆட்டத்தில் ஞாயிறன்று சேப்பாகம் ரசிகர்களை, ரிஷப் பந்த் தன் அதிரடியினால் குஷிப்படுத்துவாரா, இந்தியா முதல் இன்னிங்சி 400 ரன்களை எட்டுமா என்பதையும் பார்க்க வேண்டும். அக்சர் படேலும் ஓரளவுக்கு ஆடக்கூடியவர்தான். இவருக்கு இது அறிமுக டெஸ்ட்.

பிட்ச் செய்யும் வேலைகளைப் பார்த்தால் அக்சர், அஸ்வின், குல்தீப் யாதவ்வை இங்கிலாந்து சமாளிப்பது மிக மிகக் கடினம் என்றே தெரிகிறது. இந்தியா 300/6.
Published by:Muthukumar
First published: