சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை இன்று விடுவித்துள்ளது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 13-வது ஐ.பி.எல். சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது.
இந்த போட்டியில் விளையாடும் ஒவ்வொரு அணியும் வீரர்களை விடுவிப்பதற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது.
ஐ.பி.எல். கோப்பையை 3 முறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முதல் 5 வீரர்களை விடுவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல, மோகித் ஷர்மா, சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, துருவ் ஷோரே, சைதன்யா பிஷ்னோய் ஆகிய 5 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
வீரர்களை விடுவிப்பதின் மூலம் அந்த அணி ஏலத்தின் போது 10 கோடி வரை கைவசம் வைத்திருக்க முடியும். மோகித் சர்மா 5 கோடிக்கு எடுக்கப்பட்ட நிலையில், கடந்த சீசனில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.