ஆல்ரவுண்டர் ஆல்பி மார்க்கலுக்கு நன்றி சொன்ன சி.எஸ்.கே!

#CSK pay tribute to #AlbieMorkel retirement | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008 - 2013 வரை மொத்தம் 5 சீசன்களில் மார்க்கல் விளையாடியுள்ளார்.

news18
Updated: January 10, 2019, 2:19 PM IST
ஆல்ரவுண்டர் ஆல்பி மார்க்கலுக்கு நன்றி சொன்ன சி.எஸ்.கே!
ஆல்பி மார்க்கலுக்கு சி.எஸ்.கே நன்றி. (CSK/Twitter)
news18
Updated: January 10, 2019, 2:19 PM IST
தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆல்பி மார்க்கலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களுள் ஒருவராக வலம் வந்தவர் தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த ஆல்பி மார்க்கல். வேகப்பந்து வீச்சிலும், அதிரடி பேட்டிங்கிலும் கலக்கி வந்த இவர், ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008 - 2013 வரை மொத்தம் 5 சீசன்களில் விளையாடியுள்ளார்.

ஆல்பி மார்க்கல், Albie Morkel, CSK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல்பி மார்க்கல். (Twitter)


சென்னை அணிக்காக 974 ரன்கள் அடித்து, 85 விக்கெட்டுகளையும் எடுத்து சென்னை ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தார். டி-20 போட்டிகளில் தன்னை சிறந்த ஆல்ரவுண்டராக அடையாளப்படுத்திக் கொண்ட மார்க்கல், சர்வதேச டி-20 போட்டியில், 4,247 ரன்களும், 247 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

ஆல்பி மார்க்கல், Albie Morkel, CSK
டி-20 போட்டியில் ஆல்பி மார்க்கல். (Twitter)


தென்னாப்ரிக்க அணிக்காக 58 ஒருநாள் மற்றும் 50 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், ஒரே ஒரு டெஸ்டில் மட்டும்தான் விளாடினார். கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் களமிறங்கிய மார்க்கல் அதன்பிறகு அணியில் இருந்து ஓராங்கட்டப்பட்டார்.

இந்நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
Loading...
ஓய்வு குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “கிரிக்கெட் களத்தில் எனக்கான நேரம் முடிந்து விட்டது. 20 ஆண்டுகால மகத்தான பயணம் பல நல்ல நினைவுகளை தந்துள்ளது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கத்துக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.இவருக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளது.Photos: சிட்னியில் வலைப் பயிற்சியை தொடங்கினார் தோனி!

Also Watch...

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...