கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ்! தோனி அதிரடியால் 175 ரன்களை எட்டிய சென்னை

சென்னை அணியின் சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய அம்பதி ராயுடு 1 ரன்களிலும், ஷேன் வாட்சன் 13 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

news18
Updated: April 1, 2019, 3:31 PM IST
கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ்! தோனி அதிரடியால் 175 ரன்களை எட்டிய சென்னை
தோனி
news18
Updated: April 1, 2019, 3:31 PM IST
ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்துள்ளது.

விக்கெட் எடுத்த உற்சாகத்தில் ராஜஸ்தான் வீரர்கள்


சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே, முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று வலுவான நிலையில் இருந்தது.

தோனி


டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணியின் சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய அம்பதி ராயுடு 1 ரன்களிலும், ஷேன் வாட்சன் 13 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா நிதானமாக ஆடியநிலையில், கேதர் ஜாதவ 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சுரேஷ் ரெய்னாவுடன் ஜோடி கேப்டன் தோனி. இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்ந்தனர். நிதாரனமாக ஆடிய சுரேஷ் ரெய்னா 36 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். ட்வைன் ப்ராவோ 27 ரன்களில் ஆட்டமிழக்க, தோனி மறுபுறம் எதிரணியின் பந்துவீச்சைத் சிதறடித்தார்.

இறுதி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடிய தோனி, 20-வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் மூன்று சிக்ஸர் அடித்து அசத்தினார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது.
Loading...
Also see:POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:

விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: March 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...