ஐபிஎல் போட்டியைத் தள்ளி வைப்பதா? தெர்மல் ஸ்கேனரா ? - பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சீகர் என்பவர் ஐபிஎல் போட்டிகளுக்கு தடைவிதிக்கக் கோரி பொதுநல மனுவினைத் தாக்கல் செய்தார்.

ஐபிஎல் போட்டியைத் தள்ளி வைப்பதா? தெர்மல் ஸ்கேனரா ? - பதிலளிக்க உயர்நீதிமன்றம்  உத்தரவு.!
IPL 2020
  • Share this:
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ஐபிஎல் போட்டித் தொடரை ரத்து செய்யக்கோரிய மனுவில், மார்ச் 23-க்குள் இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகளுக்கு தடைவிதிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சீகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கானது, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைப்பதா அல்லது மைதானத்துக்கு வரும் ரசிகர்களுக்கு தெர்மல் ஸ்கேனரை கொண்டு சோதிப்பதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக பிசிசிஐ தெரிவித்தது. இதனையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 23-க்கு தள்ளிவைக்கப்பட்டது. 
First published: March 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்