தோனி, அம்பதி ராயுடு அதிரடி! கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி

சென்னை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

news18
Updated: April 11, 2019, 11:56 PM IST
தோனி, அம்பதி ராயுடு அதிரடி! கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி
தோனி
news18
Updated: April 11, 2019, 11:56 PM IST
ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி வெற்றி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 151 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

சென்னை அணி வீரர்கள்டூபிளிஸிஸ் ஏழு ரன்களிலும், சுரேஷ் ரெய்னா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 15 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது. பின்னர், அம்பதி ராயுடு, தோனி ஜோடி டீமை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் எதிரணியின் பந்து வீச்சை சிதறடித்தனர்.

அதிரடியாக ஆடிய அம்பதி ராயுடு 47 பந்துகளில் 57 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்ஸ் அடித்து அசத்தினார். இரண்டாவது பந்து நோபால் வீச அதில் ஒரு ரன் சேர்த்தனர். அடுத்தப் பந்தை எதிர்கொண்ட தோனி, இரண்டு ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவரின் மூன்றாவது பந்தை தூக்கி அடிக்க முயற்சி செய்த தோனி, போல்டானர். கடைசி மூன்று பந்துகளுக்கு எட்டு ரன்கள் தேவைப்பட்டது. மிச்செல் சன்டெர் களமிறங்கினார். கடைசி ஒரு பந்தி 3 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி பந்தை எதிர்கொண்ட மிட்செல் சன்டர் 6 அடித்தார். அதனால், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை 6 போட்டிகளில் வெற்றி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Loading...

Also see:

First published: April 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...