கோப்பையை மாத்தி மாத்தி நாங்களே வச்சிக்கிறோம் - தோனி

அடுத்த ஐபிஎல் பற்றி பேச இப்போது நேரமில்லை, உலகக் கோப்பை வருகிறது அதை முதலில் பார்க்க வேண்டும் என்றார் தோனி

Prabhu Venkat | news18
Updated: May 13, 2019, 1:16 PM IST
கோப்பையை மாத்தி மாத்தி நாங்களே வச்சிக்கிறோம் - தோனி
தோனி
Prabhu Venkat | news18
Updated: May 13, 2019, 1:16 PM IST
ஐபிஎல் கோப்பையை சென்னை, மும்பை அணிகளே வெல்வதாக தோனி கூறியுள்ளார்.

12-வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது, இந்நிலையில் நேற்று சென்னை மும்பை அணிகள் மோதிய இறுதிபோட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சனும், டூபிளிஸிஸும் நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். 26 ரன்கள் எடுத்திருந்த போது டூபிளிஸிஸ் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 8 ரன்களிலும், அம்பதி ராயுடு, 2 ரன்களிலும் ஆட்டமிழக்க வாட்சன் அதிரடியாக விளையாடினார்.


கடைசி ஓவரில் 9 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் வாட்சன் 4-வது பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். சென்னை அணி வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் தாகூர் விக்கெட்டை வீழ்த்தி மும்பை அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார் மலிங்கா.

இதையடுத்து சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி.



பின்னர் தோனி பேசியாவது, ‘ இந்த போட்டியில் இன்னும் சற்று சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும். ஐபிஎல் கோப்பையை சென்னை மும்பை அணிகளே மாத்தி மாத்தி வெல்கிறது. இரண்டு அணிகளும் சில தவறுகளை செய்தன. மும்பை அணி எங்களை விட ஒரு தவறை குறைவாக செய்தது. ஒரு அணியாக எங்களுக்கு இது சிறப்பான ஐபிஎல் தொடர். ஆனால் சில தவறுகளை நாங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். பேட்டிங்கில் சிறப்பாக பங்களிக்க வேண்டும். பவுலர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்’ என்றார்.

மேலும் அடுத்த ஐபிஎல் பற்றி பேச இப்போது நேரமில்லை. உலகக் கோப்பை வருகிறது. அதை முதலில் பார்க்க வேண்டும். பிறகு சிஎஸ்கே பற்றி பேசலாம். அடுத்த வருடம் பார்க்கலாம் என்றார் தோனி.

Also Watch

First published: May 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...