ஆஸி. வீரர்களை மோசமாக விமர்சித்த இங்கிலாந்து ரசிகர்கள்... வைரலாகும் ட்வீட்கள்!

#EnglandsBarmyArmy Trolls #DavidWarner Ahead Of #ICC #WorldCup2019 | உலகக்கோப்பையில் பங்கேற்க இருக்கும் வீரர்கள் புதிய ஜெர்சியுடன் எடுத்துக்கொண்ட உருவப்படங்களை (போர்ட்ரெய்ட்ஸ்) ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தது.

ஆஸி. வீரர்களை மோசமாக விமர்சித்த இங்கிலாந்து ரசிகர்கள்... வைரலாகும் ட்வீட்கள்!
எடிட் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களின் புகைப்படங்கள். (Twitter)
  • News18
  • Last Updated: May 10, 2019, 1:11 PM IST
  • Share this:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை கடுமையாக விமர்சித்த இங்கிலாந்து ஆதரவு ரசிகர்கள் அமைப்பின் ட்வீட்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இதில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதனையடுத்து, இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்ற ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர்.


Smith, Warner, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்
ஆஸி. வீரர் வார்னர் (இடது) மற்றும் சுமித் (Getty Image)


இந்நிலையில், உலகக்கோப்பையில் பங்கேற்க இருக்கும் வீரர்கள் புதிய ஜெர்சியுடன் எடுத்துக்கொண்ட உருவப்படங்களை (போர்ட்ரெய்ட்ஸ்) ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தது. அதில், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்ரோசமாக காட்சியளிக்கும் படங்கள் இடம்பெற்றிருந்தன.இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக இருக்கும் இங்கிலாந்து பர்மி ஆர்மி என்ற ரசிகர்கள் அமைப்பு தனது ட்விட்டரில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை கடுமையாக விமர்சித்து அவர்களின் புகைப்படங்களை எடிட் செய்து பதிவிட்டுள்ளது. அதில், அவர்கள் கைகளில் சாண்ட் பேப்பர் வைத்துள்ளது போன்றும், ஜெர்சியில் ‘ச்சீட்ஸ்’ (ஏமாற்றுபவர்கள்) என எடிட் செய்தும் பதிவிடப்பட்டிருந்தது.இந்த ட்வீட்டுக்குக் கீழே இங்கிலாந்து - ஆஸ்திரேலிய ரசிகர்கள் மாறிமாறி சண்டையிட்டு வருகின்றனர்.

2012 ஐ.பி.எல் வரலாறு மீண்டும் திரும்புமா? இன்று டெல்லியை எதிர்கொள்ளும் சி.எஸ்.கே!

நோன்பு இருந்தபோதும் விளையாடிய ஐ.பி.எல் வீரர்கள்... சீக்ரெட் உடைத்த ஷிகர் தவான்!

#IPLQualifier2: வேட்டைக்குத் தயாராகும் கர்ஜிக்கும் சிங்கங்கள்!

VIDEO | ரிஷப் பண்ட் காட்டடியால் கதறி அழுத ஹைதராபாத் பயிற்சியாளர்!

VIDEO | அதிசய முறையில் அவுட்டான டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா!

இரண்டே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த ஐ.பி.எல் பைனல் டிக்கெட்!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்