பாலியல் தொந்தரவு வழக்கு: பிரபல கிரிக்கெட் வீரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

#ChargesheetFiled Against Cricketer #MohammedShami For #Dowry, #SexualHarassment | ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் முகமது ஷமி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

news18
Updated: March 14, 2019, 8:21 PM IST
பாலியல் தொந்தரவு வழக்கு: பிரபல கிரிக்கெட் வீரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி. (Twitter)
news18
Updated: March 14, 2019, 8:21 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது ஜாமினில் வெளிவர முடியாத பாலியல் தொந்தரவு உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி. இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஷமி, Shami
பந்துவீச தயாராகும் ஷமி. (BCCI)


கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவர் மீது இவரது மனைவி பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய பிசிசிஐ, சூதாட்டத்தில் ஷமி ஈடுபடவில்லை என்பதை உறுதிசெய்து அணியில் இடம் கொடுத்தது.

முகமது ஷமி மீதான வழக்கு கொல்கத்தா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்ததால், அவ்வப்போது காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தார்.

Mohammed Shami, முகமது ஷமி
ஒரு நாள் கிரிக்கெட்டில் முகமது ஷமி. (Twitter)


இந்நிலையில், முகமது ஷமி மீது, ஜாமினில் வெளிவர முடியாத வரதட்சணை கொடுமை (பிரிவு 498 ஏ) மற்றும் பாலியல் தொந்தரவு (பிரிவு 354 ஏ) ஆகிய பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால், வரவிருக்கும் ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் முகமது ஷமி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Loading...
VIDEO: ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திய பாண்டியா!

விரைவில் எனது திறமை ஐ.பி.எல் அணி உரிமையாளர்களுக்கு புரியும் - புஜாரா ஆதங்கம்

ஐபிஎல் தொடரில் அதிக வருவாய் பெறும் பேட்ஸ்மேன்... யார் தெரியுமா...?


Also Watch...

First published: March 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...