கேப்டனாக ‘தல’ தோனியை சமன் செய்ய ரஹானேவுக்கு வாய்ப்பு- ஆஸி. மண்ணில் ‘1000’ ரன்களைக் கடக்கவும் வாய்ப்பு
ஆஸ்திரேலியாவில் சச்சின் 20 டெஸ்ட் போட்டிகளில் 1809 ரன்களை எடுத்து முதலிடம் வகிக்கிறார், விராட் கோலி 13-ல் 1352 ரன்களையும் எடுத்துள்ளனர்.

ஆட்ட நாயகன் ரஹானே.
- News18 Tamil
- Last Updated: January 6, 2021, 9:33 AM IST
இந்திய அணியின் சிறந்த கேப்டனான தோனியின் கேப்டன்சி சாதனையை நடப்பு இந்திய அணியின் கேப்டன் ரஹானே எட்டுவாரா என்ற ஆர்வம் ரசிகர்களிடத்தில் மேலோங்கியுள்ளது.
நாளை, வியாழனன்று சிட்னியில் 3வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளதையடுத்து இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியாவை ஆதிக்கம் செலுத்தி 2-1 என்று தொடரில் முன்னிலை வகித்தால் கேப்டனாக முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் வென்ற பெருமையை ரஹானே எட்டுவார்.
இதற்கு முன்பாக தோனி முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வென்றுள்ளார். ரஹானே கேப்டனாக முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து தடுமாறும் ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் பல சோதனைகள் தந்து ரஹானே வெற்றி பெறச் செய்வார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இது தவிர ஆஸ்திரேலியா மண்ணில் கொடிநாட்டிய வீரராக ரஹானே திகழ்வதற்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது, உலகில் சில தற்கால பேட்ஸ்மென்களுக்கே இத்தகைய மைல்கல் சாத்தியம்.
ரஹானே தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் 10 டெஸ்ட் போட்டிகளில் 797 ரன்கள் எடுத்துள்ளார். இந்தத் தொடரில் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 203 ரன்கள் எடுத்தாரென்றால் ஆஸ்திரேலியாவில் 1000 ரன்களை எட்டிய அபூர்வ சிகாமணியாக 5வது இந்திய வீரர் என்ற பெருமையை எட்டுவார்.ஆஸ்திரேலியாவில் சச்சின் 20 டெஸ்ட் போட்டிகளில் 1809 ரன்களை எடுத்து முதலிடம் வகிக்கிறார், விராட் கோலி 13-ல் 1352 ரன்களையும் லஷ்மண் 15 போட்டிகளில் 1206 ரன்களையும் திராவிட் 15-ல் 1143 ரன்களையும் எடுத்து அங்கு சாதித்துள்ளனர். சேவக் 10 டெஸ்ட் போட்டிகளில் 948 ரன்களை ஆஸ்திரேலியாவில் எடுத்துள்ளார். கவாஸ்கர் 11 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் 920 ரன்களை எடுத்துள்ளார்.
நாளை, வியாழனன்று சிட்னியில் 3வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளதையடுத்து இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியாவை ஆதிக்கம் செலுத்தி 2-1 என்று தொடரில் முன்னிலை வகித்தால் கேப்டனாக முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் வென்ற பெருமையை ரஹானே எட்டுவார்.
இதற்கு முன்பாக தோனி முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வென்றுள்ளார். ரஹானே கேப்டனாக முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.