Home /News /sports /

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்-30 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி தொடர்

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்-30 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி தொடர்

பாகிஸ்தான் கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட்

ஐசிசியின் எஃப்டிபி வெளியாகியுள்ளது, இதில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் சுறுசுறுப்படைகிறது, ஐசிசி உறுப்புநாடுகளில் இந்தியா நீங்கலாக அனைத்து நாட்டு அணிகளும் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடுகின்றன. இதோடு 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1996 உலகக்கோப்பைக்குப் பிறகு ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பாகிஸ்தானில் 2025ம் ஆண்டு நடைபெறவிருக்கிறது

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஐசிசியின் எஃப்டிபி வெளியாகியுள்ளது, இதில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் சுறுசுறுப்படைகிறது, ஐசிசி உறுப்புநாடுகளில் இந்தியா நீங்கலாக அனைத்து நாட்டு அணிகளும் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடுகின்றன. இதோடு 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1996 உலகக்கோப்பைக்குப் பிறகு ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பாகிஸ்தானில் 2025ம் ஆண்டு நடைபெறவிருக்கிறது.

    இதோடு ஐபிஎல் 2025க்கும் பாகிஸ்தான் சூப்பர் லீகுக்கும் இடையே கடும் போட்டி ஏற்படும் போலிருக்கிறது. இதனால் அந்த சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தனியார் டி20 லீக் போட்டிகளை மார்ச்-மே மாதத்துக்கு இடையே நடத்த பார்க்கிறது பாகிஸ்தான்.

    ஐபிஎல் எப்போதும் ஒரு நிலையான தொடராகவே உள்ளது, ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சில் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியானது. இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீகும் இதனுடன் 2025-ல் மோதினால் வீரர்களுக்கு கஷ்டம்தான்.

    இதோடு 2023-2027 சுழற்சியில் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு அணிகள் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடுகின்றன, இதில் இந்தியா கிடையாது. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அரசியல் டென்ஷன் தான் காரணம்.

    2023-27-க்கு இடையே பாகிஸ்தானுக்கு 27 டெஸ்ட் போட்டிகள் உள்ளன இதில் 13 போட்டிகள் பாகிஸ்தானில், அதே போல் 47 ஒருநாள் போட்டிகளில் 26 போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும். அதே போல் 56 டி20 போட்டிகளில் 27 டி20 சர்வதேசப் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் இதில் எதுவும் இந்தியா இடம்பெறவில்லை.

    ஐசிசியின் 12 உறுப்பினர்களில் 10 அணிகள் பாகிஸ்தானுக்கு பயணித்து டெஸ்ட், ஒருநாள், டி20 களில் ஆடுகின்றன. இதோடு, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆடும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஒன்றையும் பிப்ரவரி 2025ல் நடத்துகிறது பாகிஸ்தான். 2026ல் பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து கலந்து கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

    இந்த உறுதிப்பாடான தொடர்களினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலைமை வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: ICC, Pakistan cricket

    அடுத்த செய்தி