ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கேட்ச் பிடிக்க சென்ற இலங்கை வீரருக்கு முகத்தில் பந்து தாக்கியதில் 4 பற்கள் உடைந்தது: இணையத்தில் வைரலாகும் வீடியோ

கேட்ச் பிடிக்க சென்ற இலங்கை வீரருக்கு முகத்தில் பந்து தாக்கியதில் 4 பற்கள் உடைந்தது: இணையத்தில் வைரலாகும் வீடியோ

சாமிக்க கருணாரத்ன தாக்கிய பந்து

சாமிக்க கருணாரத்ன தாக்கிய பந்து

காயமடைந்த கருணாரத்ன உடனடியாக அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் டி20 தொடரில் பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற வீரர் மீது பந்து தாக்கி முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த காலி கிளாடியேட்டர்ஸ் அணி பேட்ஸ்மேன் நான்கவது ஓவரில் பந்தை மேலே தூக்கி அடித்தார். அதனை கேட்ச் பிடிக்க சென்ற கருணாரத்னே செல்லும் போது அவரது முகத்தில் பந்து தாக்கியது. இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவரது நான்கு பற்கள் உடைந்துள்ளது.

பந்து தாக்கிய பின்னர் கருணாரத்னவின் வாயில் இருந்து ஒரு பல் விழுந்ததை ரத்தம் வழிய ஆரம்பித்தது. மேலும் காயமடைந்த கருணாரத்ன உடனடியாக அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

First published:

Tags: Srilanka, Viral News