ரோஹித் சர்மாவின் பதிவிற்கு கிண்டலாக பதிலளித்துள்ள சஹாலின் பதில் இணையத்தில் ரசிக்கப்பட்டு வருகிறது.
இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா இந்த தொடரிலிருந்து விலகி உள்ளார்.
சஹால் தனது இன்ஸ்டாகிராமில் ஷ்ரோயஸ் ஐயர் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அந்த பதிவில் நான் எப்போதும் உனக்கு உறுதுணையாக இருப்பேன் என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவிற்கு ரோஹித் சர்மா முதலில் உன்னை நீ பார்த்து கொள் என்று கேலி செய்துள்ளார். இதற்கு “எனக்கு தெரியும். நீங்கள் என்னுடன் இல்லை என்பதால் பொறாமைப்படாதீர்கள். கட்டாயம் என்னுடைய அடுத்த புகைப்படத்தில் நீங்கள் இருப்பீர்கள்“ என்றுள்ளார்.
இவர்களின் கேலி மற்றும் கிண்டலான பதிவுகளால் சாஹலின் பதிவு மேலும் வைரலாகி வருகிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி தொடங்க உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.