Home /News /sports /

சாஹல், ரோஹித், கலீல் கூட்டணியில் அசரவைக்கும் டிக்-டாக்... ரசிகர்களிடமிருந்து குவியும் பாராட்டு

சாஹல், ரோஹித், கலீல் கூட்டணியில் அசரவைக்கும் டிக்-டாக்... ரசிகர்களிடமிருந்து குவியும் பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ரோகித் சர்மா, யுவேந்திர சாஹகல் மற்றும் கலீல் அகமது இந்தி பட காட்சி ஒன்றை நடித்து வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, ஸ்ரேஸ் ஐயர் மற்றும் யுவேந்திர சாஹகல் சில நாட்கள் முன்பு ஒரு பாடலுக்கு நடனமாடும் டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுருந்தனர். இந்த வீடியோ காட்சி வைரலானது மட்டுமல்லாமல் பலரும் அதே போன்று தாங்களும் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு, தங்களது நண்பர்களையும் இதேபோல் நடனமாடும் படி பணித்து ‘சேலஞ்ச்’ செய்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு டிக் டாக் வீடியோ மூலம் இந்த கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. இந்த முறை இந்திய அணியின் வளர்ந்து வரும் வேகப்பந்துவீச்சாளரான ஹலீல் அகமதுவும் இவர்களோடு இணைந்துள்ளார். இப்போது இவர்கள் இந்தியில் மிகவும் பிரபலமான ’டோல்’ திரைப்படத்தின் ஒரு காட்சியை டிக் டாக்கில் நடித்துள்ளனர்.



அந்த வீடியோவில் வசனத்தைவிட அவர்களின் உடல் பாவனைகள் ரசிக்கும்படியாக உள்ளன. குறிப்பாக கலீல் வீடியோவின் இறுதியில் எட்டி உதைப்பதை வரவேற்றுள்ள ரசிகர்கள்,’சாஹலுக்கு அப்படித்தான் வேணும்’ என்பது போல் கிண்டலாக பதிவிட்டு இந்த வீடியோவை, பகிர்ந்து வருகின்றனர்.
Published by:Vijay R
First published:

Tags: Tik Tok

அடுத்த செய்தி