லார்ட்ஸில் 1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் மொஹீந்தர் அமர்நாத் 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்ற சிறந்த ஒருநாள் கிரிக்கெட் இந்தியப் பந்துவீச்சை யஜுவேந்திர செஹல் நேற்று 4/47 என்று முறியடித்தார்.
அதையும் இதையும் ஒப்பிட முடியுமா? அது என்ன பவுலிங், உலகக்கோப்பை வெற்றி, அதுவும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக, இது தோல்விப் போட்டி, ஆனால் செஹல் அற்புதமாக வீசினார், இங்கிலாந்து போன்ற டீமுக்கு எதிராக செஹலை டெஸ்ட் போட்டிகளிலும் வைத்துக் கொள்ளலாம் போல்தான் தெரிகிறது.
யஜுவேந்திர செஹல் நேற்று ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி போன்ற மிக முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மொஹீந்தர் அமர்நாத்தின் லார்ட்ஸ் சாதனையை உடைத்தார்.
ரோஹித் சர்மா நேற்று டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார், பிட்ச் பின்னால் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிவிடும் என்று நினைத்தார், ஆனால் மாறவில்லை, பந்துகள் எழும்பி ஸ்விங் ஆக இங்கிலாந்தின் 246 என்ற ஒரு மிதமான இலக்கையே விரட்ட முடியாமல் இந்தியா 146 ரன்களுக்குச் சுருண்டது, செஹல் சாதனையை விழுங்கும் விதமாக டாப்லி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை வெற்றி பெறச் செய்தார்.
1983 உலகக்கோப்பை சாதனையாள்ன் அமர்நாத் சாதனை செஹல் உடைக்க, 2019 உலகக்கோப்பை சாம்பியன்களான இங்கிலாந்தை அதே தினத்தில் டாப்லி அதே லார்ட்ஸில் வெற்றி பெறச் செய்துள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India Vs England, Yuzvendra chahal