Home /News /sports /

அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்தியதில் விக்கிபீடியாவுக்கு சம்மன்

அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்தியதில் விக்கிபீடியாவுக்கு சம்மன்

அர்ஷ்தீப் சிங்

அர்ஷ்தீப் சிங்

Arshdeep Singh | அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்தி பதிவிடப்பட்டது குறித்து விக்கிபிடியாவிற்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அர்ஷ்தீப் சிங் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கியமான கட்டத்தில் ஆசிப் அலி என்ற வீரருக்கு எளிதான கேட்சை விட்டார், இதனையடுத்து ரசிகர்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர். யாரோ ஒருவர் ஒருபடிமேலே போய் அர்ஷ்தீப் சிங்கின் விக்கி பீடியா பக்கத்தில் பதிவு செய்யப்படாத பயன்பாட்டாளர் ஒருவர் காலிஸ்தான் இயக்கத்துடன் அர்ஷ் தீப்பை தொடர்புப் படுத்தி பக்கத்தை மாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.

    அர்ஷ்தீப் சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில், இந்தியா என்ற வார்த்தையை நீக்கி விட்டு, காலிஸ்தான் என்ற வார்த்தையை பதிவு செய்யப்படாத பயன்பாட்டாளர் ஒருவர் இணைத்து உள்ளார். இது சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில் பல இடங்களில் இடம் பெற்று இருந்தது.

    Also Read : இந்திய அணியை கேலி செய்த இலங்கை பத்திரிகையாளர்

    எனினும் 15 நிமிட இடைவெளியில் இந்த பதிவுகள் பின்னர் சரிசெய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில், அவரை பிரிவினைவாத காலிஸ்தானி இயக்கத்துடன் தொடர்புப்படுத்தி தகவல் வெளியிட்டு போலியான செய்தியை எப்படி பகிர முடிந்தது என்பதற்கு பதிலளிக்கும்படி விக்கிப்பீடியா அதிகாரிகளுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் இன்று சம்மன் அனுப்பி உள்ளது.

    இந்த தவறான தகவலானது, சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்த கூடும். சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கேட்டிற்கான சூழ்நிலைக்கும் வழிவகுப்பதுடன், சிங்கின் குடும்பத்தினர் மீதும் பாதிப்பு ஏற்பட கூடும் என மத்திய அரசு இந்த விஷயத்தை மிகவும் சீரியசாகப் பார்ப்பதாக எச்சரிக்கைத் தொனியில் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

    விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் உள்ளடக்கத்தை மாற்ற முடியும். ஆனால் விக்கிபீடியா இதில் லாக்-இன் செய்ய கண்டிப்பான வழிமுறைகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Asia cup

    அடுத்த செய்தி