முகப்பு /செய்தி /விளையாட்டு / கோர கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ரிஷப் பந்த்... பதறவைக்கும் காட்சிகள் வெளியீடு

கோர கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ரிஷப் பந்த்... பதறவைக்கும் காட்சிகள் வெளியீடு

கோர கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ரிஷப் பந்த்

கோர கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ரிஷப் பந்த்

Rishabh Pant | பந்த் வந்தது பிஎம்டபிள்யூ கார் என்பதால் மிக வேகமாக வந்துள்ளது. இந்த நிலையில் கடும் பனிமூட்டம் காரணம் வேகமாக வந்த ரிஷப் பந்த் கார் சாலை தடுப்பில் மோதி உள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் பயணித்த கார் சாலையின் டிவைடரில் மோதி பயங்கர விபத்துக்குள்ளனானது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

உத்தர்கண்ட்  மாநிலத்தில் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட், டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு  இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளனது.  இந்த விபத்தில் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயங்களுடன் ரிஷப் பண்ட் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்து.

பந்த் வந்தது Mercedes GLE கார் என்பதால் மிக வேகமாக வந்துள்ளது. இந்த நிலையில் கடும் பனிமூட்டம் காரணம் வேகமாக வந்த ரிஷப் பந்த் கார் சாலை தடுப்பில் மோதி உள்ளது. கார் மொத்தமும் வேகமாக தீ பிடித்துள்ளது. ஆனால் அதற்குள் பந்த காரில் இருந்து வெளியேறிவிட்டார். இதில் ரிஷப் பந்த தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. சாலை தடுப்பு மீது கார் மோதிய நிலையில் உடனே கார் தீப்பிடித்து எரிந்து உள்ளது. இந்த சம்பவத்தில் ரிஷப் பந்த் தலையில் படுகாயம் ஏற்பட்டு உள்ளது.

ரிஷப் பந்த வங்கதேச தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார். இந்திய அணியின் முக்கிய வீரராக வலம் வரும் ரிஷப் பந்த் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தணை செய்து வருகின்றனர.

First published:

Tags: CCTV, CCTV Footage, Rishabh pant