முகப்பு /செய்தி /விளையாட்டு / ''கோலி மனிதரே அல்ல'' - பிரெய்ன் லாரா இப்படி சொல்ல என்ன காரணம் தெரியுமா?

''கோலி மனிதரே அல்ல'' - பிரெய்ன் லாரா இப்படி சொல்ல என்ன காரணம் தெரியுமா?

விராட் கோலி

விராட் கோலி

கோலி தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

உலகக் கோப்பை தொடரில் கேப்டன் விராட் கோலியின் ஆட்டம் மிக சிறப்பாக அமைந்தால் கோப்பையை இந்திய அணி கட்டாயம் வெல்லும் என்று பிரெய்ன் லாரா தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்ற அணியினருக்கு சிம்ம சொப்பணமாக இருக்கக் கூடியவர். கோலியை ரன் சேசிங்கி ல் கட்டுப்படுத்துவது எதிர் அணியினருக்கு என்றுமே பெரிய சவாலாக இருக்கும். கேப்டன் பொறுப்பின் போது விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக செயல்படக் கூடியவர்.

கோலி தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையை சந்திப்பது இதுவே முதல் முறை. உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் அணிகளின் பட்டியலில் இந்திய அணியும் உள்ளது. ஒரு நாள் தொடரில் 41 சதங்கள் விளாசி உள்ள கோலி, உலகக் கோப்பை தொடரில் 11 ஆயிரம் ரன்களை கடக்க உள்ளார்.

வெஸ்ட் இண்டிஸ் முன்னாள் வீரர் ப்ரேயன் லாரா

கேப்டன் விராட் கோலி குறித்து வெஸ்ட் இண்டிஸ் அணியின் முன்னாள் வீரர் பிரெய்ன் லாரா கருத்து தெரிவித்துள்ளார். அதில் ''விராட் கோலி ஒரு ஈடு இணையற்ற வீரர். அவர் மனிதரே அல்ல, அவர் ஒரு மெஷின். போட்டியில் ரன்குவிக்க ஆரம்பித்துவிட்டால் அவரை கட்டுபடுத்த யாராலும் முடியாது. அவருடைய ஆட்டதிறன் 80 மற்றும் 90களில் விளையாடிய வீரர்களை நினைவுப்படுத்துகிறது.

என்னைப் பொறுத்த வரை சச்சின் டெண்டுல்கர் என்றுமே மிக சிறந்த வீரர். கிரிக்கெட்டில் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார். அவருடன் கோலியை ஒப்பிட முடியாது.

ஆனால் கோலியிடம்  சிறப்பான திறமைகள் உள்ளன. இளம் வீரர்களுக்கு அவர் ஒரு சிறந்த எடுக்காட்டாக இருப்பார். இந்திய அணியில் பும்ராவின் வேகம் அனைத்து அணியினைரையும் உற்று நோக்க வைத்துள்ளது. கோலியின் தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன்“ என்று தெரிவித்துள்ளார்.

Also Read : 500 ரன்களை அடிக்கப்போகும் முதல் அணி எது தெரியுமா? – விராட் கோலி பதில்

Also Read : தோனியைவிட சிறந்த வீரர் யாரும் இல்லை – ரவி சாஸ்திரி

Also Read : பெண் பயணிகளுடன் வாக்குவாதம்! விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட பிரபல ஆஸ்திரேலிய வீரர்

Also Read : உலகக்கோப்பை தொடர் சவாலாக இருக்கும்: விராட் கோலி

Also Watch

First published:

Tags: Brian lara, ICC Cricket World Cup 2019, ICC world cup, Virat Kohli, World cup cricket 2019