• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • விராட் கோலி ‘அங்க சேஷ்டைகளை’தவிர்க்க வேண்டும் கேன் வில்லியம்சன் போல் நுட்பமாக செயல்பட வேண்டும்- முன்னாள் பாக். வீரர் அட்வைஸ்

விராட் கோலி ‘அங்க சேஷ்டைகளை’தவிர்க்க வேண்டும் கேன் வில்லியம்சன் போல் நுட்பமாக செயல்பட வேண்டும்- முன்னாள் பாக். வீரர் அட்வைஸ்

விராட் கோலி

விராட் கோலி

33 டெஸ்ட் வெற்றிகளுடன் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக கோலி இருக்கலாம், ஆனால் மக்கள் மனதில் இடம்பெற வேண்டுமெனில் பெரிய தொடர்களை வெல்ல வேண்டும், அப்போதுதான் மக்கள் மனதில் இடம்பெற முடியும் என்கிறார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட்.

  • Share this:
    இதே சல்மான் பட் தான்  கொஞ்ச நாளைக்கு முன் கேன் வில்லியம்சனை விட விராட் கோலி சிறப்பு என்றார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா தோற்றவுடன் வில்லியம்சனிடமிருந்து நுட்பங்களை கோலி கற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    ஆனால் சல்மான் பட் வைக்கும் ஒரு விமர்சனம் சரியானது, களத்தில் நின்று கொண்டு கோலி செய்யும் அங்க சேட்டைகள் படுமோசமாக, அசிங்கமாக உள்ளன, அதை அவர் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பட் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

    இது தொடர்பாக சல்மான் பட் கூறியதாவது:

    நல்ல கேப்டனாக இருக்கலாம், ஆனால் எந்த ஒரு சாம்பியன் பட்டமும் வெல்லவில்லை எனில் வெகுஜனம் நம்மை நினைவில் வைத்துக் கொள்ளாது. நீங்கள் நல்ல கேப்டனாக இருக்கலாம், நல்ல திட்டங்களை வகுக்கலாம். உங்கள் பவுலர் அதை சரிவர நடைமுறைப்படுத்த முடியாமல் போகலாம். ஆகவே அதிர்ஷ்டமும் வேண்டும், மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டுமெனில் பெரிய தொடர்களில் வெல்வது அவசியம்.

    சில வேளைகளில் பெரிய கேப்டனாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நல்ல அணி இருக்கிறது என்றால் சாம்பியன் ஆகிவிடும். விராட் கோலி ஐசிசி பட்டமோ, ஐபிஎல் சாம்பியன் பட்டமோ வெல்லவில்லை. அவர் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர், அவரது உடல் மொழி ஆக்ரோஷமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் இறங்கும்போதும் 100% அணிக்காக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம் அங்க சேட்டையல்ல. கேப்டனிடம் நுப்டம் இருக்க வேண்டும், வெறும் ஆக்ரோஷ உடல் ரீதியான அசைவுகளல்ல. கோலி தன் கேப்டன்சியை கேன் வில்லியம்சனைப் பார்த்துக் கற்றுக் கொள்லலாம். டாப் கிளாஸ் கேப்டன்கள் என்பவர்கள் அழுத்தும் கணங்களில் கூலாக இருப்பார்கள். இவர்கள்தான் கோப்பையை வெல்வார்கள். விராட் கோலி வெறும் அங்க சேஷ்டைகளை மேற்கொண்டு வருகிறார், இப்படி இருப்பவர் வென்றிருந்தால் உலகம் அவரைப் போற்றியிருக்கும்.

    இவ்வாறு கூறினர் சல்மான் பட்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: