Home /News /sports /

கேப்டன்சி என்பது யாருடைய பிறப்புரிமையும் அல்ல - கோலி மீது கம்பீர் காட்டம்

கேப்டன்சி என்பது யாருடைய பிறப்புரிமையும் அல்ல - கோலி மீது கம்பீர் காட்டம்

கவுதம் கம்பீர்

கவுதம் கம்பீர்

இந்தியா-தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்: பேட்டிங் ஐகான் விராட் கோலி இந்திய அணியின் அனைத்து வடிவங்களிலிருந்தும் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு அவரது ரோல் என்னவென்று முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர் மனம்திறந்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    இந்தியா-தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்: பேட்டிங் ஐகான் விராட் கோலி இந்திய அணியின் அனைத்து வடிவங்களிலிருந்தும் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு அவரது ரோல் என்னவென்று முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர் மனம்திறந்துள்ளார்.

    கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர் கூறும்போது முன்னாள் கேப்டன் விராட் கோலி, அனைத்து வகையான கேப்டன் பதவியையும் துறந்த பிறகு, டீம் இந்தியாவுக்காக மீண்டும் ரன்கள் அடிக்கும் வழிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கருதுகிறார்.

    கேப்டன் பதவி என்பது யாருடைய பிறப்புரிமை அல்ல என்கிறார் கம்பீர். இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான வெள்ளை பந்து தொடரில் கோலியின் பங்கு பற்றி விரிவாக பேசினார். விளையாட்டு வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான தலைவர்களில் ஒருவரான பேட்டிங் மேஸ்ட்ரோ கோலி, தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் முடிவிற்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

    டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்கா கேப்டவுனில் நடந்த 3 போட்டிகள் கொண்ட தொடரை 7 விக்கெட் வித்தியாசத்தில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

    ஐந்து மாதங்களுக்குள் டி20 மற்றும் டெஸ்ட் வடிவங்களில் இருந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பிறகு, கோலி ஒரு பேட்டராகப் பொறுப்பேற்க உள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஷோ கேம் பிளான் குறித்த விவாதத்தின் போது, ​​கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பிறகு கோலியிடம் ரசிகர்கள் காணும் மாற்றங்கள் குறித்து கம்பீரிடம் கேட்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒயிட்-பால் தொடரில் கோலியின் புதிய பங்கைப் பற்றி பேசிய இந்திய முன்னாள் தொடக்க வீரர் கம்பீர், புகழ்பெற்ற கேப்டன் எம்.எஸ். தோனியைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

    கம்பீர் இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கூறும்போது, “நீங்கள் புதிதாக என்ன பார்க்க விரும்புகிறீர்கள்? கேப்டன் பதவி என்பது யாருடைய பிறப்புரிமை அல்ல. எம்எஸ் தோனி போன்றவர்கள் கேப்டன் பதவியை விராட் கோலிக்கு வழங்கியுள்ளனர், விராட் கோலியின் கீழ் அவர் விளையாடியுள்ளார். அவர் மூன்று ஐசிசி கோப்பைகளையும் நான்கு ஐபிஎல் கோப்பைகளையும் வென்றுள்ளார்.

    கோலி ரன்களை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அது மிக முக்கியமானது. நீங்கள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று கனவு காணும்போது, ​​​​நீங்கள் கேப்டனாக வேண்டும் என்று கனவு காணக் கூடாது. இந்தியாவுக்காக விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் கனவு காண்கிறீர்கள், எதுவும் மாறவில்லை, நீங்கள் டாஸ் போடவும், ஃபீல்டிங் பிளேஸ்மென்ட்டை அமைக்கவும் செல்லவில்லை. உங்களின் ஆற்றலும் தீவிரமும் அப்படியே இருக்க வேண்டும், ஏனெனில் நாட்டிற்காக விளையாடுவது கவுரவம்.” என்றார் கம்பீர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Gautam Gambhir, Virat Kohli

    அடுத்த செய்தி