Home /News /sports /

தோனிக்கு விராட் கோலியின் பிறந்த நாள் வாழ்த்து.. 2019 ஆம் ஆண்டின் டாப் ட்வீட் இதுதான்!

தோனிக்கு விராட் கோலியின் பிறந்த நாள் வாழ்த்து.. 2019 ஆம் ஆண்டின் டாப் ட்வீட் இதுதான்!

விராட், தோனி

விராட், தோனி

இந்த ட்வீட் 45 ஆயிரத்திற்கும் மேல் பகிரப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    இந்த வருடம் விளையாட்டுத் துறையில் அதிகம் பகிரப்பட்ட ட்வீட்களில், விராட் கோலி தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ட்வீட் தான் அதிகம் பகிரப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டு ஜூலை ஏழாம் தேதி தோனியின் பிறந்த நாள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அப்போது அவருடன் விளையாடும் சக விளையாட்டு வீரர்கள் ட்விட்டரில் வாழ்த்தினர். அதில் கேப்டன் விராட் கோலியின் வாழ்த்து தான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.



    அந்த ட்வீட்டில் “ பிறந்த நாள் வாழ்த்துகள் மஹி பாய். ஒரு சிலரால் மட்டுமே நம்பிக்கை மற்றும் மரியாதையின் அர்த்ததை முழுமையாக உணர முடியும். அதில் ஒருவரான உங்களை நான் நீண்ட வருடங்களாக நண்பராக பெற்றிருக்கிறேன். நீங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த சகோதரர். நான் சொன்னதைப் போல் எப்போதும் என்னுடைய கேப்டன் நீங்கள்தான் “ என அந்த ட்வீட்டில் எழுதியிருந்தார். அதோடு இருவரும் நடந்து வரும் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.

     


    இந்த ட்வீட் 45 ஆயிரத்திற்கும் மேல் பகிரப்பட்டுள்ளது. இந்த ட்வீட்தான் விளையாட்டுத் துறையில் அதிகம் பகிரப்பட்ட ட்வீட்டாக ட்விட்டர் இந்தியா அறிவித்துள்ளது.

     

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Twitter, Virat Kohli, YearEnder 2019, நிகழ்வுகள் 2019

    அடுத்த செய்தி