Home /News /sports /

மறக்க முடியாத தோல்வி... முதல் முறையாக தொடரை இழந்த கேப்டன் கோலி!

மறக்க முடியாத தோல்வி... முதல் முறையாக தொடரை இழந்த கேப்டன் கோலி!

அதிருப்தியில் விராட் கோலி. (AP)

அதிருப்தியில் விராட் கோலி. (AP)

Captain #ViratKohli suffers unbeaten run comes to end | இந்திய அணி சொந்த மண்ணில் ஒட்டுமொத்தமாக 4 டி-20 தொடர்களை இழந்துள்ளது. #INDvAUS

  • News18
  • Last Updated :
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை சொந்த மண்ணில் இழந்தது இந்திய அணிக்கு மட்டுமல்ல கோலிக்கும் மறக்க முடியாத தோல்வியாக அமைந்துவிட்டது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி, கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரு அணிகளுக்கு 2-வது மற்றும் கடைசி டி-20 போட்டி பெங்களூருவில் நேற்று (பிப்.27) நடந்தது.

    Virat Kolhi, விராட் கோலி
    அரைசதம் அடித்த விராட் கோலி. (BCCI)


    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தோனி (40) மற்றும் கோலியின் (72) அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, மேக்ஸ்வெல்லின் (113) அபார சதத்தால் 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என தொடரையும் கைப்பற்றியது.

    Glenn Maxwell, மேக்ஸ்வெல்
    சதம் அடித்த மேக்ஸ்வெல். (AFP)


    11 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக இந்தியா உடனான டி-20 தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா சாதனை படைத்தது. அத்துடன், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக தொடரை இழந்துள்ளது. இது இந்திய அணிக்கு மட்டுமல்ல கோலிக்கும் மறக்க முடியாத தோல்வியாக அமைந்துவிட்டது.

    Virat-Kohli, விராட் கோலி
    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. (AP)


    இந்திய அணி சொந்த மண்ணில் விராட் கோலி கேப்டன்ஷியின் கீழ், 7 டெஸ்ட் தொடர், 5 ஒரு நாள் தொடர் மற்றும் 4 டி-20 தொடர் என மொத்தம் 16 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியுள்ளது.

    15 தொடர்களில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. இந்திய அணி சொந்த மண்ணில் ஒட்டுமொத்தமாக 4 டி-20 தொடர்களை இழந்துள்ளது.

    VIDEO: தோனியைப் பார்த்து வாயைப் பிளந்த ஆஸி. பவுலர்!

    இந்தியா - பாக். கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடக்கும்: ஐசிசி சூசகம்!

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Captain Virat Kohli, Cricket, India vs Australia

    அடுத்த செய்தி