Home /News /sports /

கேப்டன் டீன் எல்கரின் தவறான முடிவு- இங்கிலாந்தின் Bazball அட்டாக்கில் சிக்கும் தென் ஆப்பிரிக்கா!

கேப்டன் டீன் எல்கரின் தவறான முடிவு- இங்கிலாந்தின் Bazball அட்டாக்கில் சிக்கும் தென் ஆப்பிரிக்கா!

தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர்.

தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர்.

மான்செஸ்டரில் நேற்று தொடங்கிய இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்ய முடிவெடுத்து பெரிய தவறை செய்துள்ளார், இதனால் தென் ஆப்பிரிக்க?

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
மான்செஸ்டரில் நேற்று தொடங்கிய இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.

அதன் பின் தென் ஆப்பிரிக்கா 151 ரன்களுக்குச் சுருண்டது, தொடர்ந்து இங்கிலாந்து 111/3 என்று வலுவாக உள்ளது, குறிப்பாக ஜானி பேர்ஸ்டோ 45 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து பாஸ்பால் அட்டாக்கை முன்னணிப்படுத்தியுள்ளார்.

மேகமூட்டமான வானிலையில் இங்கிலாந்து பவுலர்களின் ஸ்விங்கை ஆட முடியாது என்று தெரிந்துமே டீன் எல்கர் பேட் செய்ய முடிவெடுத்தது, இப்படி ஆடியும் இங்கிலாந்தை வெல்வோம் என்ற முடிவு சூழ்நிலைகளைக் கணித்து எடுக்கப்பட்ட முடிவல்ல. ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து மண்ணில் தன் 100வது டெஸ்ட்டில் நேற்று களமிறங்கினார், ஆள் பார்க்க 30 வயது நபர் போல்தான் இருக்கிறார், 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

மார்க்கோ யான்சென் இல்லாதது ஆச்சரியம் அவருக்குப் பதில் சைமன் ஹார்மர் என்ற ஆஃப் ஸ்பின்னர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், இவர் 7 டெஸ்ட் போட்டிகளில் 33 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளவர். சாரல் எர்வீ (3) லார்ட்ஸ் வெற்றியில் பங்களிப்பு செய்தவர் நேற்று செட்டில் ஆகவிடாமல் தடுக்கப்பட்டார், காரணம் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஆலி ராபின்சனின் அபார பந்து வீச்சே.

எல்கர் ராபின்சன் நோ-பாலில் அவுட் ஆகி தப்பித்ததை பயன்படுத்திக் கொள்ளாமல் 12 ரன்களில் பிராட் பந்தை எட்ஜ் செய்து 2வது ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். கீகன் பீட்டர்சன் நல்ல நம்பிக்கை அளித்த தருணத்தில் 21 ரன்களில் பிராடிடம் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

66/3 என்ற நிலையில் பென் ஸ்டோக்ஸ் வந்து அய்டன் மார்க்ரம் (14), ரசி வாண்டர் டசன் (16) விக்கெட்டுகளை வீழ்த்த உணவு இடைவேளையில் தென் ஆப்பிரிக்கா 77/5 என்று சரிந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு அபார ஜேம்ஸ் ஆண்டர்சன் சைமன் ஹார்மர், கேஷவ் மகராஜை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். ரபாடா, 36, ஆன்ரிச் நார்ட்யே 10, ஸ்கோரை  151 ரன்களுக்கு நகர்த்தினர். தென் ஆப்பிரிக்கா 53.2 ஓவர்கள்தான் தாங்கியது. இங்கிலாந்து தரப்பில் பிராட், ஆண்டர்சன் தலா 3 விக்கெட்டுகளையும் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற ஆலி ராபின்சன், ஜாக் லீச் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் லீஸ் மீண்டும் 4 ரன்களில் லுங்கி இங்கிடியின் அற்புதமான அவுட் ஸ்விங்கருக்கு எட்ஜ் ஆகி வெளியேறினார். ஆலி போப் 4 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த நார்ட்யேவின் இன்ஸ்விங்கரில் மட்டையில் பட்டு பவுல்டு ஆனார்.

ஆலி போப் நார்ட்யேவை 3 எட்ஜ் பவுண்டரிகள் அடிக்கும் போதே காலியாகி விடுவார் என்று தெரிந்தது . ஜோ ரூட்  9 ரன்களில் ரபாடாவின் பந்தில் எட்ஜ் ஆகி அவுட் ஆனார். இங்கிலாந்து 43/3, ஆனால் அதன் பிறகு பேர்ஸ்டோ கொஞ்சம் தடவினாலும் 6 பவுண்டரிகளுடன் 45 பந்தில் 38 என்று பாஸ்பால் கிரிக்கெட்டுக்கு தயாராகியுள்ளார், கிராலி செம தடவல் இன்னிங்சில் 77 பந்துகளில் 17 ரன்களுடன் ஆடி வருகிறார். இங்கிலாந்து 111/3 என்று வலுவாக உள்ளது.
Published by:Saravana Siddharth
First published:

Tags: Cricket, Cricket match

அடுத்த செய்தி