குவாரண்டைன்.. வொர்க் ஃப்ரம் ஹோம் -மைதானத்தில் களமிறங்க காத்திருக்கும் புஜாரா

புஜாரா

குவாரண்டைனில் இருப்பதால் பிட்னஸ் முக்கியம் பாஸ் என தனது பெரும்பாலான நேரத்தை ஜிம்மில் செலவிடுகிறார் புஜாரா.

 • Share this:
  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்க்கொள்கிறது. இந்தப்போட்டியானது இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் ஜூன் 18 ஆம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் மும்பையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து ஃபிட்னஸுடன் இருப்பதற்காக இந்திய வீரர்கள் அதிக நேரம் ஜிம்மில் செலவிட்டு வருகின்றனர். இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் அணிந்து விளையாடவுள்ள ஜெர்சியை அணிந்தபடி ரவீந்திர ஜடேஜா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த கேப்ஷனில் 90களில் இந்திய டெஸ்ட் அணி பயன்படுத்திய ஜெர்சியை போன்று இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

  இந்நிலையில் மைதானத்தில் களமிறங்க காத்திருப்பதாக புஜாரா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து செல்லும் இந்திய வீரர்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்டுள்ளனர். மும்பையில் இரண்டு வாரம் குவாரண்டைனை நிறைவு செய்த பின்னர் இவர்கள் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்வார்கள். இங்கிலாந்து செல்லும் இந்திய வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என இந்திய அரசு அறிவித்தவுடன் வீரர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.

  இந்திய அணியின் தூணாக விளங்கும் புஜாரா  மே 10-ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். மனைவியுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். இங்கிலாந்து சென்றதும் அவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படும் எனக் கூறப்படுகிறது.அதாவது ஒரு வீரர் இரண்டாவது தடுப்பூசி போடும் காலம் வந்தவுடன் அவர்களுக்கு அங்குள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  குவாரண்டைனில் இருப்பதால் பிட்னஸ் முக்கியம் பாஸ் என தனது பெரும்பாலான நேரத்தை ஜிம்மில் செலவிடுகிறார் புஜரா. இதற்கிடையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் குவாரண்டைனில் இருப்பதால் வொர்க் ஃப்ரம் ஹோம் என பேட்டுடன் போஸ் கொடுத்துள்ளார் புஜாரா. அதுபோல் "இதுதான் புதிய கிட், மைதானத்தில் களமிறங்க காத்திருக்கிறேன்" என்ற கேப்ஷனுடன் புதிய ஜெர்சியுடன் புஜாரா போஸ் கொடுத்துள்ளார். கோப்பையுடன் திரும்பி வாருங்கள் என ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: