ஒரு அணியில் 11 கோலி இருக்க முடியாது - முரளிதரன் ஆவேச பதில்!

Cannot Have 11 #ViratKohlis In The Team: #MuttiahMuralitharan | இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 2-2 என சமனில் உள்ளது.

ஒரு அணியில் 11 கோலி இருக்க முடியாது - முரளிதரன் ஆவேச பதில்!
விராட் கோலி மற்றும் முத்தையா முரளிதரன்.
  • News18
  • Last Updated: March 12, 2019, 1:33 PM IST
  • Share this:
ஒரு அணியில் 11 கோலி இருக்க முடியாது என இலங்கையைச் சேர்ந்த சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நேற்று முன் தினம் (மார்ச் 11) நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, ஷிகர் தவான் 143 ரன்கள் விளாசினார்.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 47.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 2-2 என சமனில் உள்ளது.


Australia Team, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
இந்திய விக்கெட்டை வீழ்த்தியதைக் கொண்டாடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. (ICC)


இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்களை கிரிக்கெட் ரசிகர்கள் முன்வைத்தனர். இந்நிலையில், இந்தப் போட்டி குறித்து இலங்கையைச் சேர்ந்த சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கருத்துக் கூறியுள்ளார்.

அவர் பேசுகையில், “சில போட்டிகளில் வெற்றி பெற்றால், சில போட்டிகளில் தோல்வி கிடைக்கும். இல்லையென்றால் ஒவ்வொரு அணியிலும் 11 கோலி அல்லது சச்சின் டெண்டுல்கர் அல்லது டாப் பிராட்மேன் இருக்க வேண்டும். அது முடியாது. இந்திய அணி சிறப்பாக விளையாடியது. உலகக் கோப்பைக்கு முன் கிடைத்த நல்ல அனுபவமாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Loading...

Muttiah Muralitharan, முரளிதரன்
டெஸ்ட் போட்டியில் முத்தையா முரளிதரன்.


மேலும், “வீரர்கள் மீது ரசிகர்கள் அதிக அழுத்தம் தரக் கூடாது. அப்போதுதான் அடுத்த போட்டியின்மீது அவர்களால் கவனம் செலுத்த முடியும்” என்று ரசிகர்களுக்கு முரளிதரன் அறிவுரை வழங்கினார்.

ராணுவ தொப்பி விவகாரம்: பல்பு வாங்கிய பாகிஸ்தான்!

தயவு செய்து தோனியுடன் ரிஷப் பண்ட்-ஐ ஒப்பிடாதீர்கள்: ஷிகர் தவான்

Photos: பத்ம விருதுகள் பெற்ற விளையாட்டு பிரபலங்கள்!

விளையாடாமலே ட்விட்டர் டிரெண்டிங்கில் இருந்த தோனி!

VIDEO: நீங்க அடுத்த தோனியா? அழகான ரன் அவுட்டை கோட்டை விட்ட ரிஷப்... கடுப்பான கோலி!

Also Watch...

First published: March 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...