ரிக்கி பாண்டிங்கின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த கனடா வீரர்!

கனடா அணி வீரர் ரவீந்திர்பால் சிங் 48 பந்துகளில் 10 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் விளாசி 101 ரன்கள் எடுத்து அசத்தினார்.

ரிக்கி பாண்டிங்கின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த கனடா வீரர்!
ரவீந்தர்பால் சிங்
  • Share this:
டி20 உலகக் கோப்பை போட்டிக்கான தகுதி சுற்றில் கனடா வீரர் ரவீந்தர்பால் சிங் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கனடா அணியும் கெய்மன் தீவுகள் அணியும் மோதின.

முதலில் விளையாடிய கனடா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இமாலய இலக்குடன் களமிறங்கிய கெய்மன் தீவுகள் அணி கனடா பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 112 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியடைந்தது.


இந்த போட்டியில் கனடா அணி வீரர் ரவீந்திர்பால் சிங் 48 பந்துகளில் 10 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் விளாசி 101 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் அறிமுக டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங்கின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2005ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் 98 ரன்கள் விளாசியிருந்தார். இதுதான் டி20 அறிமுக போட்டியில் வீரர் ஒருவர் அடித்த அதிகப்பட்ச ரன்களாக இருந்தது. இந்த சாதனையை கனடா வீரர் தற்போது முறியடித்துள்ளார்.

Also Watch
First published: August 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading