• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்த புகைப்படத்தில் இருக்கும் மகேந்திர சிங் தோனியை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

இந்த புகைப்படத்தில் இருக்கும் மகேந்திர சிங் தோனியை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

தோனியின் பள்ளிப்பருவ புகைப்படம்

தோனியின் பள்ளிப்பருவ புகைப்படம்

மகேந்திர சிங் தோனியின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Share this:
    மகேந்திர சிங் தோனி, இது ஒரு பெயர் மட்டுமல்ல. பல கோடி கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வு. எந்த ஒரு வீரர் அவுட்டானாலும் களத்தில் தோனி இருக்கிறார் என்றால் எதிரணிக்கும் பீதியும், ரசிகர்களுக்கு நம்பிக்கையும் எப்போது நீங்காமல் இருக்கும். அதுவே அவரை சிறந்த ஃபினிஷர் என்ற அடையாளத்தை கொண்டு வந்தது.

    கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி இன்று 40 வயததை எட்டினார். தோனி ஒரு அசாதாரண கேப்டன் மட்டுமல்ல, ஒரு சிறந்த விக்கெட் கீப்பராகவும், வியக்க வைக்கும் ஃபினிஷராகவும் இருந்தார். தோனி தலைமையிலான இளம்படை 2007-ம் ஆண்டு முதன்முறையாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை வென்று சாதனை படைத்தது.

    டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு பெற்று தந்து வெற்றி நடைப்போட்ட கேப்டன் மகேந்திர சிங் தோனி 2013 சாம்பியன்ஸ் டிராஃபி, 2011 உலகக்கோப்பையும் வென்றது. 2010 மற்றும் 2016 ஆசிய கோப்பையை வென்ற தோனி டெஸ்ட் தரவரிசையில் (2009) இந்திய அணியை முதலிடத்திற்கு கொண்டு வந்தார்.

    இப்படி பல சாதனைகளை தன்வசம் வைத்துள்ள மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில் மகேந்திர சிங் தோனியின் மறக்க முடியாத நினைவலைகள் கொண்ட புகைப்படங்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் தோனி பள்ளிப்பருவ புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து இதில் யார் தோனி என்று கண்டுபிடிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.



    அந்த புகைப்படத்தில் இருக்கும் தோனியை கண்டுபிடிக்க பலர் ஆர்வம் காட்டி உள்ளனர். இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.









    மேலும் மகேந்திர சிங் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பல ட்வீட்களும் இணையத்தில் பறக்கின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் தோனியை வாழ்த்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: