ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

முதல் போட்டிக்கு முன்பே யுவராஜ் சிங்கின் தூக்கத்தை கெடுத்த கங்குலி

முதல் போட்டிக்கு முன்பே யுவராஜ் சிங்கின் தூக்கத்தை கெடுத்த கங்குலி

yuvraj-ganguly

yuvraj-ganguly

2000ம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இடது கை ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் அறிமுகமானார், கங்குலி கேப்டன்சியில் அறிமுகமாகும் போது நடந்த ருசிகர சம்பவம் ஒன்றை யுவராஜ் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • 2 minute read
  • Last Updated :

2000ம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இடது கை ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் அறிமுகமானார், கங்குலி கேப்டன்சியில் அறிமுகமாகும் போது நடந்த ருசிகர சம்பவம் ஒன்றை யுவராஜ் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஸ்போர்ட்ஸ் 18 சேனனில் "ஹோம் ஆப் ஹீரோஸ்" நிகழ்ச்சியில் பேசிய யுவராஜ் தனது முதல் சர்வதேச போட்டிக்கு முந்தைய நாள் நடந்த நிகழ்வு குறித்து பேசியுள்ளார்.

அந்த ஒருநாள் சர்வதேசப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் போட்டியில் இளம் வீரராக களமிறங்கிய யுவராஜ் ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தார். ஆனால் இவருக்கு முன்பே சச்சின் டெண்டுல்கர் கிளென்மெக்ராவை பொளந்து கட்டி விட்டார், ஓவர் முடிந்து போகையில் நடுவரிடமிருந்து ஆத்திரத்துடன் தொப்பியைப் பிடுங்கிச் சென்றார் மெக்ரா. சச்சின் 37 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 38 ரன்கள் எடுத்தார். இந்தியா முதலில் பேட் செய்து 265/9 என்ற ஸ்கோரில் முடிவடைய யுவராஜ் அறிமுகப் போட்டியிலேயே அதுவும் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 84 ரன்கள் எடுத்து உலகை தன் பக்கம் திருப்பினார்.

ஜாகீர் கானுக்கும் இதுதான் அறிமுகப் போட்டி, அவர் ஸ்டீவ் வாஹை பவுல்டு செய்தது திருப்பு முனையாக அமைந்தது. ஆடம் கில்கிஸிடையும் ஜாகீர் கான் வீழ்த்தினார். யுவராஜ் சிங் இயன் ஹார்விக்கு ஒரு கேட்சை எடுத்தார் பாருங்கள், ஆகச்சிறந்த கேட்ச். அதோடு அப்போதைய கேம் பினிஷர் மைக்கேல் பெவனை சடுதியில் பீல்ட் செய்து ரன்னர் முனையில் நேரடியாக ஸ்டம்பை பெயர்த்து ரன் அவுட் செய்தாரே பார்க்கலாம் யுவராஜ். ஆஸ்திரேலியா 245க்கு சுருண்டு தோல்வி கண்டது.

அந்தப் போட்டியில் 84 ரன்கள், ஒரு ரன் அவுட், அபாரமான பீல்டிங், பெரிய கேட்ச் என்று தன் வருகையை அறிவித்தார் யுவராஜ்.

அந்தப் போட்டிக்கு முதல்நாள் கங்குலி தன்னிடம் கூறியதை வெளிப்படுத்திய யுவராஜ் சிங் கூறியதாவது: " நாளைய போட்டியில் தொடக்க வீரராக களமிறக்குகிறாயா என கங்குலி என்னிடம் கேட்டார். உங்கள் விருப்பம் அதுவென்றால் நான் தொடக்க வீரராக இறங்குகிறேன் என தெரிவித்தேன். அதன்பிறகு அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை " என யுவராஜ் தெரிவித்தார்.

ஆனால் தொடக்கத்தில் யுவராஜை இறக்கவில்லை 5ம் நிலையில்தான் இறக்கினார். ஆனால் ஒருமுறை டெஸ்ட் போட்டியில் சென்னையில் 221 ரன்கள் இலக்கை எதிர்த்து இந்தியா ஆடிய போது சேவாகுடன் யுவராஜ் சிங்கை தொடக்கத்தில் இறக்கினார் கங்குலி. 5ம் நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பு பறிபோனது, ஒருவேளை அந்தப் போட்டி நடந்திருந்தால் யுவராஜ் ஒரு ஓப்பனராக டெஸ்ட் கிரிக்கெட்டில் கொஞ்ச காலம் வலம் வந்திருப்பார்.

First published:

Tags: Sourav Ganguly, Yuvraj singh