Home /News /sports /

நம்ப முடிகிறதா?- ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவை விடவும் புஜாரா பின்னி எடுத்த காலம் உண்டு

நம்ப முடிகிறதா?- ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவை விடவும் புஜாரா பின்னி எடுத்த காலம் உண்டு

புஜாரா

புஜாரா

இன்று புஜாரா என்றால் லொட்டு வைப்பவர், ஆஃப் வாலி பந்தைக் கூட பீல்டர் கையில் அடித்து விட்டு ரன்களுக்காக திருதிருவென விழிப்பவர் என்ற பிம்பம் மேலோங்கிய நிலையில் 2006-ல் ரோகித் சர்மாவை விடவும் ஒருநாள் போட்டிகளில் புஜாரா பிரமாதமாக ஆடியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

மேலும் படிக்கவும் ...
    இன்று புஜாரா என்றால் லொட்டு வைப்பவர், ஆஃப் வாலி பந்தைக் கூட பீல்டர் கையில் அடித்து விட்டு ரன்களுக்காக திருதிருவென விழிப்பவர் என்ற பிம்பம் மேலோங்கிய நிலையில் 2006-ல் ரோகித் சர்மாவை விடவும் ஒருநாள் போட்டிகளில் புஜாரா பிரமாதமாக ஆடியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

    செட்டேஷ்வர் புஜாரா மற்றும் ரோஹித் சர்மா இருவரும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடிய காலம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? 2006 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை, இலங்கையில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்த இந்தியாவுக்கு வெற்றிகரமான நிகழ்வாக அது அமைந்தது.

    அனால் அந்த அண்டர் 19 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அண்டர் 19 அணி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது. ஆனால் புஜாரா பெரிதும் பேசப்பட்டார். காரணம் தொடக்க வீரராக இறங்கி அவர் ஒருநாள் போட்டிகளிலும் நான் தாதாவாக வருவேன் என்று அறிவித்தார் அந்த உலகக்கோப்பையில் புஜாரா 6 இன்னிங்ஸ்களில் 349 ரன்கள் எடுத்தார். சராசரி 116, ஸ்ட்ரைக் ரேட் 82.

    மறுபுறம், சீனியர் ஒருநாள் மற்றும் டி20 அணியின் தற்போதைய கேப்டனாக இருக்கும் ரோஹித் ஷர்மா 2006 அண்டர்19 உலகக்கோப்பையில் ஒரு பேட்ஸ்மேனாக வெற்றிபெறவில்லை. அவர் 6 போட்டிகளில் 41 சராசரி மற்றும் 77 ஸ்டிரைக் ரேட்டில் மொத்தம் 206 ரன்களை மட்டுமே எடுத்தார். இருப்பினும், டீம் இந்தியாவின் ஒரு நாள் போட்டிகளில் சேதேஷ்வர் புஜாரா வெற்றிபெறவில்லை, ரோகித் வெற்றி பெற்ற கேப்டனாகியிருக்கிறார், இதுதான் விதி வலியது என்பதற்கான உதாரணம்.

    புஜாரா 2013 மற்றும் 2014 க்கு இடையில் இந்தியாவுக்காக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவர் 51 ரன்களை 10 என்ற சராசரியின் கீழ் 39 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்ததால் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

    கடந்த முறை சிஎஸ்கே அணி இவரை எதற்கும் இருக்கட்டும் என்று அணியில் எடுத்தது, ஆனால் ஒப்புக்கு சப்பாணியாகக் கூட இவரைப் பயன்படுத்தவில்லை தோனி. பாபா அபராஜித் போன்ற இளம் திறமைகளையே காயடித்தவர் தோனி, புஜாராவைப் போய் எப்படி ஆடவைப்பார், ஆகவே 2006-ல் மிகவும் பிராமிசிங்காகத் தொடங்கிய அவரது குறைந்த ஓவர் கிரிக்கெட் வாழ்க்கை அற்பாயுசில் முடிவதற்கு முன்பாக அவரும் கூறிக்கொள்ளலாம், ‘டேய்! நானும் ஒருகாலத்தில் ரோஹித் சர்மாவை விட சிறந்த ஒருநாள் பேட்டராக இருந்திருக்கிறேன்’ என்று.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cheteshwar Pujara, Rohit sharma

    அடுத்த செய்தி