இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக கிரிக்கெட் போட்டி நடத்தப்படாமல் இருப்பதற்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கவலை தெரிவித்துள்ளார்.
மும்பைத் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் உடனான நேரடிப் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுவது இல்லை. உலகக் கோப்பை, சாம்பியன் டிராஃபி, ஆசியக் கோப்பை போன்ற தொடர்களில் இந்திய அணி பாகிஸ்தான் உடன் மோதி வருகிறது. கடைசியாக இந்தியா - பாகிஸ்தான் தொடர் 2012-13ல் நடைபெற்றது.
இந்தியா - பாகிஸ்தான் நேரடிப் போட்டிகள் நடைபெற வேண்டுமென கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக சோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்தியா - பாகிஸ்தான் தொடர் விரைவில் நடைபெற வேண்டுமென என ஆசைப்படுகிறேன்.
இந்தியா கபடி அணி பாகிஸ்தான் வந்து விளையாடி சென்றது. அவர்களுக்கு முழு பாதுகபாப்பு வழங்கப்பட்டது. இந்தியா முழு உறவையும் துண்டிக்க வேண்டுமென்றால் கபடி, வர்த்தகம் எல்லாம் எதற்காக நடத்துகின்றனர். கிரிக்கெட்டிற்கு மட்டும் தடைவிதிக்க என்ன காரணம்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே வெங்காயம், தக்காளி வர்த்தகம் நடைபெறும்போது கிரிக்கெட் போட்டி மட்டும் ஏன் நடைபெறக் கூடாது என வினவியுள்ளார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது நாட்டிற்குள் நேரடியாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாவிட்டாலும், இருநாடுகளுக்கு வெளியே நடைபெறும் ஆசியா கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கலாம் என்றும் அக்தர் யோசனை கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.