Home /News /sports /

கோடிகளைச் சுமந்திருக்கும் கோலியை நீக்க முடியுமா?

கோடிகளைச் சுமந்திருக்கும் கோலியை நீக்க முடியுமா?

விராட் கோலி

விராட் கோலி

ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப அவுட் ஆகும் அளவுக்கு விராட் கோலிக்கு ஒருவகையான திமிர் இருக்கிறது என்றால் தன்னை அணியிலிருந்து நீக்க எவருக்கேனும் துணிவு உண்டா என்று கேட்பதற்குச் சமமே. அதே போல் விராட் கோலியை நாம் அவ்வளவு எளிதாக அணியிலிருந்து நீக்கிவிட முடியாது என்பதற்கு காரணம் அவரது வர்த்தக நெட்வொர்த் அதாவது வர்த்தக மதிப்பு, விராட் கோலியின் பிராண்ட் வேல்யூ ஜனவரி 2022 கணக்கின் படி ரூ.960 கோடி.

மேலும் படிக்கவும் ...
  ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப  அலட்சியப் போக்குடன் அவுட் ஆகும் அளவுக்கு விராட் கோலிக்கு ஒருவகையான திமிர் இருக்கிறது என்றால் தன்னை அணியிலிருந்து நீக்க எவருக்கேனும் துணிவு உண்டா என்று கேட்பதற்குச் சமமே. அதே போல் விராட் கோலியை நாம் அவ்வளவு எளிதாக அணியிலிருந்து நீக்கிவிட முடியாது என்பதற்கு காரணம் அவரது வர்த்தக நெட்வொர்த் அதாவது வர்த்தக மதிப்பு, விராட் கோலியின் பிராண்ட் வேல்யூ ஜனவரி 2022 கணக்கின் படி ரூ.960 கோடி என்று சில செய்திகள் கூறுகின்றன.

  அதாவது அவரது இப்போதைய வருமானம், ஸ்பான்சர்களால் கிடைக்கும் எதிர்கால வருமானம், மேலும் அவரது முதலீடுகளின் மூலம் உயரும் அவரது வர்த்தக மதிப்பு கிட்டத்தட்ட 1000 கோடியை நெருங்குகிறது என்கிறது வணிக வட்டாரங்கள்.

  சுமார் 17 பிராண்ட்களின் விளம்பர ஹீரோ விராட் கோலிதான். புமா, மிந்த்ரா, ராகன், எம்.ஆர்.எஃப். டயர்ஸ், ஆடி இந்தியா, உள்ளிட்ட பெரிய பெரிய பிராண்ட்களுடன் எம்.ஆர்.எஃப் மிகவும் காஸ்ட்லியான பிராண்ட் அம்பாசடர் விராட் கோலி அதன் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது. இதோடு பிசிசிஐ ஆண்டு ஒப்பந்தத்தில் இவருக்கு ரூ.7 கோடி சம்பளம்.

  ஜெர்மனியைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம் புமா, 2017-ல் கோலியை ரூ.110 கோடிக்கு பிராண்ட் அம்பாசடராக ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் மட்டும் 2025 வரை உள்ளது, எனவே குறைந்தது 2025 வரை கோலியை அணியை விட்டு நீக்க முடியாது. புமாவுடன் இணைந்துதான் விராட் கோலி ஒனெ8 என்ற பிராண்டை தொடங்கினார் கோலி.

  விராட் கோலி ட்ராப்.


  ஹிமாலயா என்ற நிறுவனத்தின் பொருட்கள் உலகம் முழுதும் விற்கப்படுவது, இதன் பிராண்ட் அம்பாசடராக விராட் கோலியும் ரிஷப் பண்ட்டும் 2019ம் ஆண்டு ஒப்பந்திக்கப்பட்டனர். ராகன் என்ற இன்னொரு பன்னாட்டு பிராண்ட் விராட் கோலியை பிராண்ட் தூதராக 2014-லேயே ஒப்பந்தம் செய்தது.

  எம்.ஆர்.எஃப் பேட் ஸ்பான்சர் ஒப்பந்தத்தில் கோலியின் தொகை ரூ.100 கோடி, இதுவும் 2025வரை நீடிக்கும். இதோடு இவரது வருமானம் என்பது பிசிசிஐ ஒப்பந்தம் ரூ.7 கோடி, ஐபிஎல் சம்பளம் ரூ.17 கோடி, டெஸ்ட் மேட்ச் ஒன்றுக்கு ரூ.15 லட்சம்.ஒருநாள் மேட்ச் ஒன்றுக்கு ரூ.6 லட்சம். டி20 மேட்ச் தொகை ரூ3 லட்சம்.

  இதோடு ஜனவரி 2021-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த ஒரு கட்டுரையின்படி, லாபம் தரும் இரட்டை ஆதாய பதவி என்ற விவகாரம் இருக்கிறது. பிப்ரவரி 2019-ல் விராட் கோலி முதலீடு செய்த ஒரு நிறுவனம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கிட் ஸ்பான்சர் மற்றும் வர்த்தகக் கூட்டாளி. 2019-ல் இவர் எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் என்ற ஆன்லைன் கேமிங் நிறுவனத்தில் கோலி முதலீடு செய்தார், 2020-ல் அந்த நிறுவனம் பிசிசிஐ-யின் கிட் ஸ்பான்சர்கள் மற்றும் இந்திய அணியின் மெர்கண்டைஸ் கூட்டாளி. இந்த நிறுவனம் கோலிக்கு அப்போது ஷேர்களாக மாற்றக்கூடிய கடன்பத்திரங்களை லட்சக்கணாக்கான ரூபாய்களுக்கு வழங்கியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

  மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க ஆயுள் உறுப்பினர் சஞ்சய் குப்தா, அப்போதைய இந்திய அணி கேப்டன் விராட் கோலி மீது அளித்த புகார் என்னவெனில் இவர் கேப்டனாகவும் இருக்கிறார், அதே போல் டேலண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி ஒன்றின் இயக்குநர் குழுவிலும் கோலி இடம்பெற்றுள்ளார். இதில் இந்திய வீரர்கள் சிலரும் இடம்பெற்றுள்ளனர்.

  விராட் கோலியின் வணிக விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளும் நிறுவனம் தான் மற்ற 5 வீரர்களின் வர்த்தக விஷயங்களையும் கவனித்து வந்தது. இதைக் கருத்தில் கொண்டுதான் அப்போது இந்தியன் எக்ஸ்பிரச் நாளேடு எழுதிய போது, இந்திய பிளேயிங் லெவன் என்னவென்பதையே இவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள் என்று எழுதியது.

  மேலும் விராட் கோலி மைதானத்தில் ஆடும்போது காட்டும் உற்சாகம், எதிரணியினரை செய்யும் கேலி ஆகியவை கணிசமாக பார்வையாளர்களை ஈர்க்கிறது. எனவே கோலி இல்லாவிட்டால் அது நல்ல ஷோவாக இருக்காது என்று ஒளிபரப்பு உரிமைகள் பெற்ற நிறுவனங்களும் கருதலாம். அவர் பெரிய நட்சத்திர அந்தஸ்து பெற்ற சூப்பர் ஸ்டார் நடிகர் போலத்தான். அவரால் பிசிசிஐ பெறும் வருமானம் ஸ்பான்சர்கள், பெரிய தொகைகள் கொடுத்து ஒப்பந்த உரிமை பெறுபவர்கள் என்று கோலியின் பக்கம் பயங்கர ஸ்ட்ராங். அதனால்தான் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ரஷீத் லடீப் கூறியது போல் ‘விராட் கோலியை நீக்கும் தைரியம் கொண்ட தேர்வாளர் இன்னும் பிறக்கவில்லை’ என்றார்.

  இப்படி பெர்பார்மன்சைத் தாண்டியும் அணியில் நீடிக்க சில பல சூப்பர்ஸ்டார்க்ளால் முடியும் போது புதிதாக எழுச்சி பெறும் வீரர்கள் பிரமாதமாக ஆடினாலும் உட்கார வேண்டிய சூழ்நிலை ஏன் என்று புரியாது குழம்புபவர்களுக்குக் குழப்பத்தைத் தீர்க்கும் திறவு கோல் ‘வர்த்தகம்’ என்பதைப் புரிந்து கொள்ள இன்னும் சில காலம் பிடிக்கும். இது கோலிக்கு மட்டுமல்ல ரோஹித் சர்மா, முன்பு சச்சின் டெண்டுல்கர் பிறகு தோனி என்று அனைவருக்குமே பொருந்தும். தனியார் கிரிக்கெட் பிறந்து வளர்ந்து வரும் புதுயுக கிரிக்கெட் உலகத்தில் அணித்தேர்வை திறமை மட்டுமே தீர்மானிப்பதில்லை. வேறு புற அழுத்தங்களும் தீர்மானிக்கின்றன என்பதை புரிந்து கொண்டால், கோலியிடம் இன்னும் ஆட்டமிருக்கிறது, கோலியிடம் திறமை மீதமிருக்கிறது போன்ற கிளிஷேக்களிலிருந்து விடுபட்டு உண்மையான பார்வை நமக்குக் கிட்டும். திறமையும் கிரிக்கெட்டும் அவர் அணியில் இருப்பதை இப்போது தீர்மானிக்கவில்லை என்பதுதான் விஷயம்.

  இந்த ஒரு மிகப்பெரிய பின்னணியில்தான் அவர் அனில் கும்ப்ளேவை வேண்டாம் என்று கூறி நீக்கச் செய்ய முடிந்துள்ளது. இதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட ரவி சாஸ்திரி மிக அழகாக கோலிக்குக் கொம்பு சீவி விட்டு வந்தார், அவரது பேட்டிங்கை மேம்படுத்த ரவி சாஸ்திரி என்ன செய்தார் என்ற கேள்வி பலருக்கும் எழக்காரணம் இதுதான்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: BCCI, Team India, Virat Kohli

  அடுத்த செய்தி