• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தலைமைப் பயிற்சியாளாராவாரா திராவிட்?- மனம் திறக்கும் கங்குலி

தலைமைப் பயிற்சியாளாராவாரா திராவிட்?- மனம் திறக்கும் கங்குலி

ராகுல் திராவிட்

ராகுல் திராவிட்

டி20 உலகக்கோப்பையுடன் ரவிசாஸ்திரியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைகிறது. அடுத்தது திராவிட் வருவாரா என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் கங்குலி அதன் வாய்ப்புகள் பற்றி மனம் திறந்துள்ளார்.

  • Share this:
    டி20 உலகக்கோப்பையுடன் ரவிசாஸ்திரியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைகிறது. அடுத்தது திராவிட் வருவாரா என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் கங்குலி அதன் வாய்ப்புகள் பற்றி மனம் திறந்துள்ளார்.

    இலங்கைக்கு எதிரான இளம் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டதையடுத்தே அவர்தான் அடுத்த கோச் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர், இந்திய சீனியர் அணியில் புதிதாக நுழையும் இளைஞர்கள் திராவிடின் பயிற்சிப் பட்டரையில் உருவானவர்கள் என்பதால் தலைமைப் பயிற்சியாளராக அவர் வருவார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

    ராகுல் திராவிட் இந்தியா-ஏ, இந்தியா யு-19 வீரர்களை உருவாக்கி வளர்த்தெடுப்பதில் ராகுல் திராவிட் தற்போது முதன்மையாகத் திகழ்கிறார், தான் செய்யும் இந்தக் காரியத்தில் தனக்கு முழு திருப்தி இருக்கிறது என்றும் தலைமைப் பயிற்சியாளராக ஆவது பற்றி யோசிக்கவில்லை என்றும் ஏற்கெனவே திராவிட் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி இது தொடர்பாக கூறும்போது, திராவிட் இப்போதைக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறினார், ஆனால் இது தொடர்பாக கிரிக்கெட் வாரியமோ தானோ இன்னும் திராவிட் இடம் மனம் விட்டுப் பேசவில்லை என்று கங்குலி கூறினார்.

    Also Read: ரோகித் சர்மாவுக்கு கேப்டன்சியா?- பிசிசிஐ மறுப்பு

    “நிரந்தரமாக தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு வகிக்க அவருக்கு இப்போதைக்கு ஆர்வம் இல்லை என்றே தெரிகிறது. நாங்களும் அவரது விருப்பம் பற்றி குறிப்பாக இது பற்றி எதுவும் அவரிடத்தில் கேட்கவில்லை. அதற்கான நேரம் வரும்போது இது பற்றி முடிவெடுப்போம்” என்றார்.

    ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது குறித்து..

    தோனியை மென்ட்டாராக நியமிப்பது யாருடைய ஐடியா என்பது தேவையில்லாத விஷயம். இந்தியாவின் வெற்றிதான் உடனடியானது. என்றார் கங்குலி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: