மகள் போன்ற உறவில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்வதை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமா என்று டுட்டீ தாயார் கேட்டுள்ளார்.
ஒடிசாவை சேர்ந்தவர் 23 வயதானவர் டுட்டீ சந்த். கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று 2 வெள்ளிப்பதக்கங்களை இந்தியாவிற்கு வென்று தந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலின விவகாரத்தில் சிக்கினார். அவரிடம் ஆண்தன்மைக்குரிய ஹார்மோன் அதிகமாக இருப்பதாக கூறி தடகள போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. பின்னர் 2015ம் ஆண்டு அவர் மீதான தடை விலக்கி கொள்ளப்பட்டது.
Also Watch :வைரல் வீடியோ: தல தோனி ஸ்டைலில் ரன் அவுட் செய்து பிரபலமான இங்கிலாந்து வீரர்!
இந்நிலையில் தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகாவும், எனக்கான துணையை தேடி கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் தனது சொந்தக்கார பெண் தான், அவர் மீது அதிகம் ஈர்ப்பு உள்ளதால் எதிர்காலத்தில் அவருடன் இணைந்து வாழ விரும்புகிறேன்.
தன்பாலின உறவை நான் எப்போதும் ஆதரித்து வந்தேன். இப்போதும் விளையாட்டின் மீது அதிக கவனம் செலுத்துகிறேன். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி கொண்டிருக்கிறேன். இவை அனைத்தும் எனது தனிப்பட்ட முடிவே என்று டூட்டி தெரிவித்துள்ளார். இவரின் முடிவை இவரது குடும்பத்தினர் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
Also Watch :அணியின் வெற்றிக்காக போராடியதில் வாட்சனை மிஞ்சிய இங்கிலாந்து வீரர்!
இந்நிலையில் டுட்டீ தாயார் அக்கோஜி ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “எனது மகள் திருமணம் செய்து கொள்ள நினைப்பது யாரை தெரியுமா? அந்த பெண் எனது மருமகளின் பெண், என்னுடைய பேத்தி. எனக்கு பேத்தி என்றால் டுட்டீக்கு மகள் போன்றவள். ஒரு மகளை தாய் திருமணம் செய்து கொள்வதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா?
நான் எனது மகளிடம் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்னதற்கு நீதிமன்றம் உத்தரவு என்னிடம் இருக்கிறது என்கிறார். அவர்கள் இப்போது எங்கு இருக்கீறார்கள் என்று தெரியாது. ஆனால் டுட்டீ இதை எல்லாம் மறந்துவிட்டு விளையாட்டில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
Also Watch :வைரல் வீடியோ : வாய்விட்டு சிரிக்க வைத்த சோகிப் மாலிக்கின் ஹிட் அவுட்!
ஒரு பெண் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது இந்த சமூகத்திற்கும்,சட்டத்தின் முன் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ப்படும். ஆனால் நாங்கள் கிராமத்துவாசிகள் எங்களால் இதுப்போன்ற செயல்களை என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.
Also Watch :Video: உலகக்கோப்பையில் இதை மறக்க முடியுமா? அமீர் சோஹல் சேட்டையை அடக்கிய வெங்கடேஷ் பிரசாத்
Also Watch :இந்திய வீரரை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்
Also Watch :#ICCWorldCup2019: சச்சினின் 16 வருட சாதனையை யாராவது முறியடிப்பார்களா?
Also Watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.