தோனி விளையாடலாமா...? வேண்டாமா...?

கடந்த சில நாட்களாகவே தோனியின் ஓய்வு குறித்த செய்திகள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன.

news18
Updated: July 18, 2019, 1:09 PM IST
தோனி விளையாடலாமா...? வேண்டாமா...?
தோனி
news18
Updated: July 18, 2019, 1:09 PM IST
தோனி 2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும் என்று அவருடைய சிறுவயது பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே தோனியின் ஓய்வு குறித்த செய்திகள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் 2019 உலகக்கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணியிடம் அரையிறுதியில் தோற்று தொடரில் இன்று வெளியே வந்தது. இதையடுத்து தோனியின் ஓய்வு பற்றிய செய்தி அதிக அளவில் பேசுபொருளானது.

இந்நிலையில் தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி, தோனி 2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், ‘டி 20 தொடர்களில் தோனி தொடர்ந்து விளையாட வேண்டும். 50 ஓவர் போட்டி முழுவதும் கீப்பிங் செய்துவிட்டு விளையாடுவது என்பது கடினமான ஒன்று. அதோடு அவர் வீரர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். ஆனால் டி-20 போட்டிகளில் விளையாடுவது எளிமையான ஒன்று’ கூறியுள்ளார்.


மேலும் தோனியின் தற்போதைய உடல்நிலை அவர் டி-20 போட்டிகளில் விளையாட சிறப்பானவர் என்பதை காட்டுகிறது. இதனால் அவர் அடுத்த டி-20 உலகக்கோப்பை தொடரில் விளையாடலாம் என்று கேஷவ் பானர்ஜி கூறியுள்ளார்

Also watch

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...