கேப்டனாக ஷிகர் தவான் சாதிப்பாரா?- இலங்கை பயணத்துக்கு அடுத்த இளம் இந்திய அணி ரெடி

ஷிகர் தவான்

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அணியின் மூத்த வீரர் என்ற முறையில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  உண்மையில் ஷிகர் தவானின் சுயநலமற்ற ஆட்டத்துக்கும் அவரது கடின உழைப்புக்கும் கிடைத்த பரிசு இது, அதுவும் கிரெக் சாப்பல் கைவண்ணத்தில் வளர்ந்த பயிற்சியாளர் ராகுல் திராவிட் மேற்பார்வையில் ஷிகர் தவானுக்கு கிடைத்த இந்த கேப்டன்சி வாய்ப்பு விராட் கோலிக்கு கிடைக்காதது.

  உள்நாட்டு போட்டிகளிலும் ஐபிஎல்லிலும் அபாரமாக ஆடிய இளம் வீரர்களான தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இந்திய அணியில் முதல் முறையாக எடுக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம் இடது கை ஃபாஸ்ட் பவுலர் சேத்தன் சக்காரியாவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

  ஷிகர் தவான் தலைமையிலான அணியில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, தீபக் சாஹர், சாஹல், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

  வருண் சக்கரவர்த்தி, கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய ஸ்பின்னர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இஷான் போரெல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் ஆகியோர் நெட் பவுலர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி:

  ஷிகர் தவான்(கேப்டன்), புவனேஷ்வர் குமார்(துணை கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ராணா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யஜுவேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கௌதம், குருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சகாரியா.

  Also Read: West Indies vs South Africa | 12 பவுண்டரி, 7 சிக்சர்கள் 141 ரன்கள் விளாசிய குவிண்டன் டி காக்: இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க மே.இ.தீவுகள் போராட்டம்

  ஜூன் 14ம் தேதி முதல் மும்பையில் இந்த இளம் இந்திய அணி தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஜூன் 28ம் தேதி இலங்கைக்கு இந்திய அணி செல்கிறது.

  3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளும் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. ஜூலை 12ம் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது, டி20 போட்டிகள் ஜூலை 21, 23, 25 தேதிகளில் நடைபெறுகிறது.
  Published by:Muthukumar
  First published: