Home /News /sports /

பிசிசிஐ-க்கு எக்கச்சக்கமாக பணம் தரவேண்டிய பைஜூஸ்- ஸ்பான்சரிலிருந்து விலகுகிறது பேடிஎம்

பிசிசிஐ-க்கு எக்கச்சக்கமாக பணம் தரவேண்டிய பைஜூஸ்- ஸ்பான்சரிலிருந்து விலகுகிறது பேடிஎம்

சீருடை ஸ்பான்சர் பைஜுஸ்

சீருடை ஸ்பான்சர் பைஜுஸ்

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர் நிறுவனமான பைஜூஸ் பிசிசிஐ-க்கு ரூ.86.21 கோடி தொகை நிலுவை வைத்துள்ளது.பிசிசிஐ டைட்டில் ஸ்பான்சரிலிருந்து பேடிஎம் விலக விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

    இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர் நிறுவனமான பைஜூஸ் பிசிசிஐ-க்கு ரூ.86.21 கோடி தொகை நிலுவை வைத்துள்ளது.பிசிசிஐ டைட்டில் ஸ்பான்சரிலிருந்து பேடிஎம் விலக விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

    கடந்த ஏப்ரலில்தான் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ் ஸ்பான்சர் 2023 உலகக்கோப்பை வரை நீடிக்கும் என்று கூறப்பட்டது. இதற்காக 10% கூடுதல் தொகையும் பேசப்பட்டது.

    இது இப்படியிருக்க பைஜூஸ் நிறுவனம், பிசிசிஐ-க்கு ரூ.86.21 கோடி நிலுவை வைத்துள்ளது. இது தொடர்பாக பைஜூஸ் செய்தித் தொடர்பாளர் பிடிஐ-யிடம் கூறும்போது, “பிசிசிஐ-உடனான எங்கள் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவுள்ளது. ஆனால் இன்னும் கையெழ்த்தாகவில்லை.

    ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ஒப்பந்த விதிமுறைகளின்படி பிசிசிஐக்கு சேர வேண்டிய தொகை தானாக சேரும். எனவே எங்கள் பக்கத்திலிருந்து நிலுவை எதுவும் இல்லை, என்றார்.

    இன்னொரு புறம் பேடிஎம் நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரிலிருந்து தங்களை விடுவித்து மாஸ்டர் கார்டிடம் அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது. பேடிஎம் உடனான ஒப்பந்தம் 2023 மார்ச் 31ம் தேதி வரை இருக்கிறது.

    இந்நிலையில் பேடிஎம் உடனான நீண்ட கால உறவின் அடிப்படையில் அவர்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: BCCI, BYJU'S, Paytm

    அடுத்த செய்தி