முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பும்ரா விளையாட வேண்டும்’ – ராபின் உத்தப்பா விருப்பம்

‘ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பும்ரா விளையாட வேண்டும்’ – ராபின் உத்தப்பா விருப்பம்

பும்ரா

பும்ரா

இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட வேண்டுமென்று கிரிக்கெட் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.  இதன்மூலம் அவரது தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். காயத்திற்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர், இந்திய அணியின் முக்கியமான கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பும்ரா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பும்ராவின் பங்களிப்பு அதிகம் இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே காயத்தில் இருந்து குணமடைந்த வீரர்கள், உலககோப்பை கிரிக்கெட் தொடரை கவனத்தில் கொண்டு ஐபிஎல் தொடரை தவிர்க்கலாம் என்று பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது. இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என்று கூறியுள்ள கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, இதன்மூலம் பும்ராவின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகள் டெல்லி, தர்மசாலா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கின்றன. டெஸ்ட் தொடரை தொடர்ந்து மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரும் நடைபெற உள்ளது.

First published:

Tags: Cricket