ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பும்ராவிற்கு பதில் மாற்று வீரர் யார்? குழப்பத்தில் இருக்கும் இந்திய அணியில் இடம் பிடிக்கபோவது யார்? ஒர் அலசல்

பும்ராவிற்கு பதில் மாற்று வீரர் யார்? குழப்பத்தில் இருக்கும் இந்திய அணியில் இடம் பிடிக்கபோவது யார்? ஒர் அலசல்

ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்

ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலககோப்பை தொடரில் பும்ராவுக்கு பதிலாக யாருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்போம்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி கடந்த சில மாதங்களில் இருந்தே தயார்ப்படுத்தி வருகிறது. காரணம் இந்திய அணி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமீரகத்தில் நடைபெற்ற டி20 தொடரில் தோல்வியடைந்தது. கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்ட இந்த தொடர் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில் இந்த தொடர் முடிந்து அடுத்த ஆண்டே அடுத்த டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் என ஐசிசி அறிவித்து இருந்தது.

  டி20 உலகக்கோப்பை தொடருக்கு வலுவான இந்திய அணி அறிவிக்கப்பட்டாலும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுவது இந்திய அணியின் பந்துவீச்சின் முதுகெலும்பாக திகழும் பும்ராவின் விலகல் தான். முதுகு வலி காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ள பும்ராவுக்கு பதில் யாரை அணியில் சேர்ப்பது என இந்திய அணியில் குழப்பம் நீடித்து வருகிறது. ஆஸ்திரேலிய மைதானத்தில் அனுபவம் இல்லாதபுதிய வேகப்பந்து வீச்சாளர்களை விளையாட வைத்தால் அது விஷ பரீட்சையில் தான் முடியும் என்பது முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கருத்தாக உள்ளது.

  1st ODI: Jasprit Bumrah Takes Career-best 6/19 as India Bundle Out England For 110
  பும்ரா

  இதனால் பும்ரா இடத்தில் யாரை விளையாட வைப்பது என்பது குறித்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் புதிய வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலிய மைதானத்தில் அறிமுக இல்லாத வீரர்களை பயிற்சி  அளிக்க இந்திய அணி முன்கூட்டியே ஆஸ்திரேலியாவுக்கு சென்று தீவிர பயிற்சி எடுக்க உள்ளது.

  இதையும் படிங்க: பலே திட்டங்களுடன் ஆஸ்திரேலிய செல்லும் இந்தியா: டி20 உலகக்கோப்பை தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மாவின் சூப்பர் பிளான்!!..

  பும்ராவிற்கு பதிலாக யாரை இந்திய அணியில் விளையாட வைப்பது என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில் டி20 உலகக்கோப்பையில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி இடம் பெறுவாரா? என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கேட்ட போது, பும்ராவுக்கு மாற்றாக யார் இடம் பெறுவார் என்பதை ஆலோசித்து வருகிறோம். அக்டோபர் 15 வரை எங்களுக்கு நேரம் உள்ளது. முகமது ஷமி மாற்று வீரர்கள் பட்டியலில் உள்ளதாக தெரிவித்தார்.

  Rahul Dravid on changing Indian captains – 'Got opportunities to create more leaders in the group'
  பயிற்சியாளர் ராகுல் டிராவிட்

  கொரோனா பாதிப்பு காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் ஷமி ஆடவில்லை. அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகடாமியின் கண்காணிப்பில் இருக்கிறார். அவர் எப்படி குணமடைந்து வருகிறார் என்பதை அறிக்கை மூலம் தான் தெரியவரும். கொரோனா பாதிப்பு 15 நாட்களுக்கு பிறகு அறிக்கை கிடைக்கும். நாங்கள் ஒரு அழைப்பை விடுப்போம். அவருடைய அறிக்கை கிடைத்தவுடன் எதை எவ்வாறு முன்னெடுத்து செல்வது பற்றி ஆலோசிப்போம் என ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

  Mohammed Shami will not be part of T20 World Cup team, former Indian pacer made a big statement
  முகமது ஷமி

  பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் கருத்து கிரிக்கெட் விமர்சகர்களிடையே பல விவாதங்களை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தியுள்ளது. முகமது ஷமியை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் ஒரு சிலரும் பும்ராவுக்கு பதிலாக தீபக் சாஹரை அணியில் சேர்க்கலாம் என சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  ரசிகர்களின் கருத்தை  கொண்டு இந்திய அணியில் யார் இடம் பிடித்தால் சாதகமாக அமையும் என்பதையும் பார்போம்..முகமது ஷமிக்கு உடற்தகுதி சான்று கிடைத்து இந்திய அணியில் இடம் பிடித்தால், இந்திய அணிக்கு அது சாதகமாகவே அமையும் ஏன் என்றால், ஆஸ்திரேலிய மைதானங்களில் முகமது ஷமிக்கு நல்ல அனுபவங்கள் உள்ளது. இதுவரை 17 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஷமிக்கு ஐபிஎல் தொடர்களில் நன்றாக பந்துவீசிய அனுபவம் உள்ளது.

  அது மட்டும் இல்லாமல் யார்க்கர் பந்துகளை துல்லியமாகவும், இன் - ஸ்விங் பந்துகளை நேர்த்தியாக வீசக்கூடியவர். மேலும் அவ்வப்போழுது பவுன்சர் பந்துகளை வீசியும் பேட்ஸ்மேகளுக்கு டஃப் கொடுப்பார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர்களில் பவர் பிளே ஓவர்களில் துல்லியமாக பந்து வீசி இந்திய அணியின் டி20 போட்டிகளில் இடம் கிடைக்க உதவியது. இந்த நிலையில் முகமது ஷமி அணியில் விளையாடினால் பும்ராவின் இடத்தை ஓரளவு பூர்த்தி செய்வார் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாகவே உள்ளது.

  மேலும் பும்ரா இடத்திற்கு மேலும் ஒருவரின் பெயரும் இடம் பிடிக்க பரவலாக வாய்ப்பு உள்ளது. ஆல்ரவுண்டர் கணக்கில் கூட இவரது பெயரை வைக்கலாம். இந்திய அணியில் தற்போது ஆல்ரவுண்டர் பணியை செய்து வரும் தீபக் சாஹரை கூறலாம். ஆம் டி20 போட்டிக்கென்றே பக்கவாக தயார் செய்து வைத்து இருந்தார் சென்னை அணி கேப்டன் தோனி. ஐபிஎல் போட்டிகளில் பவர் பிளே ஓவர்களில் இன் -ஸ்விங் மந்திரத்தை வைத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியில் இடம் பிடித்தார். கடந்த சில போட்டிகளில் பேட்டிங்கிலும் நன்றாக விளையாடி வருகிறார் தீபக் சாஹர்.

  Deepak Chahar Far Better Option Than Bhuvneshwar Kumar In Australia'-Former Pak Spinner Explains Why
  தீபக் சாஹர்

  இந்திய அணியில் தற்போது இடது கை வேகப்பந்து வீச்சாளராக அணியில் இருக்கும் அர்ஷ்தீப் சிங்கை  கூட  தேர்வு செய்யலாம்.காரணம் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி, சில உள்ளூர் போட்டிகள் விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அர்ஷ்தீப் சிங் ஆஸ்திரேலிய மைதானங்களில் எப்படி பந்து வீச போகிறார் என்பது தான் அனைவரது எதிர்பார்பாக உள்ளது. கடந்த சில ஆட்டங்களில் ரன்களை வாரி வழங்கினாலும், டெத் ஓவர்களில் நன்றாக பந்துவீசி அதனை சரி செய்து விடுகிறார். இருப்பினும் ஆஸ்திரேலிய மைதானத்தில் எப்படி பந்துவீச போகிறார் என்பதையும் யோசிக்க வேண்டி உள்ளது.

  Arshdeep Singh rising to new heights in international arena
  அர்ஷ்தீப் சிங்

  இருப்பினும் பேட்டிங்கிலும் தனது திறமையை தீபக் சாஹர் நிருபித்து வருவதால் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு பெரும் சவலாகவே உள்ளது. பும்ராவின் இடத்தை முகமது ஷமி மற்றும் தீபக் சாஹர் இருவரில் யார் பிடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்த்தாலும் இந்த இரண்டு வீரர்களும் டி20 உலகக்கோப்பை தொடரில் ஸ்டாண்ட் பை வீரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. வீரர்கள் தேர்வில் கவனமுடன் கையண்டு வரும் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்த விவகாரத்தில் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்போம்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Indian cricket team, Jasprit bumrah, Rahul Dravid, T20 World Cup