ஜஸ்பிரித் பும்ரா சந்தேகத்திற்கு இடமின்றி தற்போது உலக கிரிக்கெட்டில் சிறந்த அனைத்து வடிவ பந்துவீச்சாளர்களில் ஒருவர். 2016 ஆம் ஆண்டு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் இந்தியாவுக்காக அறிமுகமானதில் இருந்து, அவர் தனது பிரமாதமான ஆற்றல் மூலம் இந்திய அணியில் தனது இடத்தை நிலைநாட்டியுள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா சந்தேகத்திற்கு இடமின்றி தற்போது உலக கிரிக்கெட்டில் சிறந்த அனைத்து வடிவ பந்துவீச்சாளர்களில் ஒருவர். 2016 ஆம் ஆண்டு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் இந்தியாவுக்காக அறிமுகமானதில் இருந்து, அவர் தனது பிரமாதமான ஆற்றல் மூலம் இந்திய அணியில் தனது இடத்தை நிலைநாட்டியுள்ளார்
பும்ரா எந்த தருணத்திலும் நம்பகமான பவுலர் என்று கேப்டன்களில் நம்பிக்கைக்குப் பாத்திரமான பவுலர். ஆட்டத்தின் எந்த வடிவத்திலும் பும்ராகிட்ட பந்தை கொடுத்தால் விக்கெட் நிச்சயம். கிட்டத்தட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் விக்கெட் எடுத்துள்ளார். அவரது பந்துவீச்சு ஆட்டத்தை மாற்றும் தனித்துவமான திறனைக் கொண்டது.
அன்று ஓவலில் முதல் ஓருநாள் போட்டியில் 7.2 ஓவர்களில் 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்தின் ‘பாஸ்பால்’ டெக்னிக்குக்கு ஆப்பு வைத்து போட்டியை நோ-லாசில் இந்தியாவ் வெல்ல உதவினார்.
குறுகிய காலத்தில் இந்தியாவின் பெரிய மேட்ச் வின்னராகத் திகழ்கிறார் பும்ரா, ஆனாலும் அவரை அதற்குள் மார்ஷல், வாசிம் அக்ரம் மட்டத்தில் வைத்து பேச முடியாது என்கிறார் மஞ்சுரேக்கர்.
அவர் ஸ்போர்ட்ஸ் 18 சேனலுக்குக் கூறும்போது, “இன்னும் அந்த லீகில் பும்ரா இல்லை. அவரிடம் அந்த இடத்துக்கு செல்வதற்கான ஆற்றலும் திறமையும் உள்ளது. இப்படிப்பட்ட ஒப்பீட்டினால் பிரச்சனை என்னவெனில் இவர்கள் நீண்ட காலம் ஆடியவர்கள், அனைத்து சூழ்நிலைகளிலும் வீசி வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.
மார்ஷல், வாசிம் அக்ரமெல்லாம் ஆல்டைம் கிரேட்கள். எங்களைப் போன்ற வல்லுநர்களைத் திருப்தி செய்வது கடினம். இந்தியாவில் பும்ரா எத்தனை போட்டிகள் ஆடியிருக்கிறார் என்று பாருங்கள் குறைவுதான், வேகப்பந்து வீச்சுக்கு கடினமான இங்கு அவருக்கு பெரிய சவால், உதவியாக இருக்கும் வெளிநாட்டு பிட்ச்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா, இந்தியாவில் பெரிய பேட்டர்களுக்கு வீசும் சவால் பும்ராவுக்கு இன்னும் இருக்கிறதே” என்கிறார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.