ஏழே ஸ்டெப் தான்.. 5 விநாடிகளில் பேட்ஸ்மென்களுக்கு பீதியைக் கிளப்புகிறார் பும்ரா- அக்தர் புகழாரம்

ஏழே ஸ்டெப் தான்.. 5 விநாடிகளில் பேட்ஸ்மென்களுக்கு பீதியைக் கிளப்புகிறார் பும்ரா- அக்தர் புகழாரம்

ஷோயப் அக்தர்.

துல்லியமாக வீசுகிறார் தூக்கத்திலிருந்து எழுப்பி வீசச் சொன்னால் கூட அதே இடத்தில் பந்தை பிட்ச் செய்வார் போல் தெரிகிறது என்று பும்ரா குறித்து புகழ்கிறார் ஷோயப் அக்தர்.

 • Share this:
  நடப்பு உலக கிரிக்கெட்டில் மிகவும் சாதுரியமான, புத்திசாலித்தனமான பவுலர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது ஜஸ்பிரீத் பும்ராதான் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல் ஷோயப் அக்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.

  மேலும் மைதானத்தில் காற்று வீசும் திசை,  வேகம், கோணம் ஆகியவற்றை வைத்து தான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ரிவர்ஸ் ஸ்விங் எந்த முனையில் எடுக்கும் என்பதைக் கணிப்போம் என்று கூறிய அக்தர், இந்திய அணியில் தற்போது பும்ரா மட்டுமே அதைச் செய்கிறார், வேறு எந்த பவுலருக்கும் இந்தத் திறமை இருப்பதாக தனக்குத் தெரியவில்லை என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் ஷோயப் அக்தர்.

  ஸ்போர்ட்ஸ் டுடே சேனலுக்கு அக்தர் கூறியதாவது:

  “காற்றின் திசை, வேகம் ஆகியவற்றை கவனித்து வீசும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராதான். பிட்சில் புற்கள் இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் எங்களுக்கும் இரண்டாம்பட்சம்தான், பும்ராவுக்கும் இரண்டாம் பட்சம் என்றே தெரிகிறது.

  Indian cricketers income, Jasprit Bumrah income, Virat Kohli income, Rohit Sharma income, Jasprit Bumrah, Virat Kohli, Rohit Sharma, BCCI, பிசிசிஐ, விராட் கோலி, பும்ரா
  பும்ரா


  எங்களுக்குத்தான் காற்றுடன் எப்படி விளையாடுவது என்பது. நான், வாசிம், வக்கார் காற்றின் திசை, வேகம் ஆகியவற்றைப் பயன்படுத்துவோம். எங்களுக்கு மெக்கானிக்ஸ், ஏரோ டைனமிக்ஸ் தெரியும். எந்த நேரத்தில் எவ்வளவு ஸ்விங் ஆகும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். பும்ராவுக்கும் இவையெல்லாம் தெரியும் என்றே நான் கருதுகிறேன். மற்ற வீச்சாளர்களுக்கு இது தெரியவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

  7 ஸ்டெப்தான் ஓடி வருகிறார் 5 விநாடிகளில் பேட்ஸ்மென்கள் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் பும்ரா. 5 விநாடிகளில் பேட்ஸ்மெனை எப்படி வீழ்த்துவது என்று முடிவு கட்டுகிறார் பும்ரா.

  வழக்கத்துக்கு மாறான ஒரு வீச்சாளர், நல்ல குணம்படைத்தவர், உடற்தகுதி அனுமதித்தால் நீண்ட காலம் ஆடுவார். பும்ரா மிகவும் சூட்சமான பொறிகளை வைக்கிறார். அந்த இடத்தில் 60 பந்துகளை வீசச் சொன்னாலும் அந்த இடத்தில் பிட்ச் செய்வார் போல் தெரிகிறது. ஓவர் த விக்கெட்டில் வரும் போது கிரீசை நன்றாகப் பயன்படுத்துகிறார். சரியாக 4வது ஸ்டம்ப், 3வது ஸ்டம்பில் வீசுகிறார்.

  துல்லியமாக வீசுகிறார் தூக்கத்திலிருந்து எழுப்பி வீசச் சொன்னால் கூட அதே இடத்தில் பந்தை பிட்ச் செய்வார் போல் தெரிகிறது.

  இவ்வாறு கூறினார் ஷோயப் அக்தர்.
  Published by:Muthukumar
  First published: