வேகப்பந்து மட்டுமல்ல ஸ்பின்னிலும் கில்லாடி: அனில் கும்ப்ளே போல் வீசி வியக்க வைத்த பும்ரா

வேகப்பந்து மட்டுமல்ல ஸ்பின்னிலும் கில்லாடி: அனில் கும்ப்ளே போல் வீசி வியக்க வைத்த பும்ரா

கும்ப்ளே போல் வீசும் பும்ரா.

2018-19 தொடரில் 9 விக்கெட்டுகளை மெல்போர்னில் எடுத்து ஆஸி.யை நசுக்கிய பும்ரா இந்த முறை 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

 • Share this:
  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக தயாரிப்பிலும் வலைப்பயிற்சியிலும் இந்திய அணி ஈடுபட்டு வருகிறது. இதில் ஜஸ்பிரித் பும்ரா தான் வேகப்பந்து வீச்சில் மட்டுமல்ல ஸ்பின்னிலும் கில்லாடி என்பதற்கு இணங்க ஸ்பின் பவுலிங் வீசி அசத்தினார். அதுவும் லெக் ஸ்பின்.

  ஜஸ்பிரித் பும்ராவுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு, நெட்டில் சக பவுலர்களின் ஆக்‌ஷனை இமிடேட் செய்து அப்படியே வீசி விகடம் செய்வார்.

  நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் வலைப்பயிற்சியில் 6 வேறு வேறு பவுலர்களை அவர்களைப் போல் வீசி இமிடேட் செய்து விகடம் செய்தது குறிப்பிடத்தக்கது.

  ஒருமுறை சுனில் கவாஸ்கர் அப்படியே அப்துல் காதிர் போல் வீசிக்காட்டினார், விவ் ரிச்சர்ட்ஸ் மொஹீந்தர் அமர்நாது போல் வீசிக் காட்டுவார்.

  இந்நிலையில் பிசிசிஐ பகிர்ந்த வீடியோ ஒன்றில் ஜஸ்பிரித் பும்ரா அப்படியே கும்ப்ளே போல் ஆக்‌ஷனில் வீசி அசத்தினார். அதுவும் லெக் ஸ்பின்.

  பிசிசிஐ இதனை விதந்தோதி, பும்ராவின் பொறிபறக்கும் யார்க்கர்களையும் கூர்மையான பவுன்சர்களையும் தான் பார்த்திருக்கிறோம், இங்கு இவர் அனில் கும்ப்ளேயின் பந்து வீச்சு முறையை இமிடேட் செய்து ஸ்பின் வீசுகிறார், என்று கூறியுள்ளது.

  பும்ரா தன் ஆரம்ப கால கிரிக்கெட்டை கும்ப்ளே பயிற்சியாளராக இருந்த போது ஆடியதுதான். இந்தியப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கோலியினால் கீழிறக்கப்பட்ட அனில் கும்ப்ளேவுடனான உறவு பும்ராவுக்கு இன்னும் தொடர்கிறது. மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற வகையில் பும்ரா கும்ப்ளே சாதனையைச் சமன் செய்தார்.

  கும்ப்ளே மெல்போர்னில் 3 டெஸ்ட் போட்டிகளில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்ற பும்ராவும் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சமன் செய்தார்.

  2018-19 தொடரில் 9 விக்கெட்டுகளை மெல்போர்னில் எடுத்து ஆஸி.யை நசுக்கிய பும்ரா இந்த முறை 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: