Home /News /sports /

பும்ராவெல்லாம் ஒண்ணும் இல்ல.. ஷாஹின் அப்ரீடி, ஹாரிஸ் ராவுஃப்தான் பெஸ்ட்- முன்னாள் பாக். வீரர் சீண்டல்

பும்ராவெல்லாம் ஒண்ணும் இல்ல.. ஷாஹின் அப்ரீடி, ஹாரிஸ் ராவுஃப்தான் பெஸ்ட்- முன்னாள் பாக். வீரர் சீண்டல்

பும்ரா- அப்ரீடி

பும்ரா- அப்ரீடி

பும்ராவெல்லாம் பெரிய அச்சுறுத்தல் இல்லை, ஷாஹின் ஷா அப்ரீடிதான் அச்சுறுத்தும் பவுலர் அதே போல் பும்ராவை ஒப்பிடுகையில் பாகிஸ்தானின் ஹாரிஸ் ராவ்ஃபின் உடல் மொழி, வேகம் ஆக்ரோஷம், பந்து வீச்சு அனைத்துமே பயங்கரமாக உள்ளது என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...

    பாகிஸ்தான் டிவி-க்கு ஆகிப் ஜாவேத் கூறும்போது, “பும்ரா சீராக வீசுகிறார், ஆனால் ஷாஹின் ஷா அப்ரீடியை ஒப்பிடும்போது பும்ரா பெரிய அச்சுறுத்தலெல்லாம் ஒன்றுமில்லை. அதே போல் ஹாரிஸ் ராவுஃப் கடந்த சில ஆண்டுகளாக வீசும் சராசரி வேகமே உலகின் பயங்கர வேகப்பந்து வீச்சாக உள்ளது.அவரது ஆக்ரோஷமான ரன் அப், எல்லாமே அக்ரசிவ், ஆனால் பும்ரா அப்படி ஒரு ஆக்ரோஷமான பவுலர் அல்ல. பும்ராவை விட ஹாரிஸ் ராவுஃப் உடல் மொழி ஆக்ரோஷமானது.

    அதே போல் பும்ரா டெஸ்ட், ஒருநாள், டி20 எதாக இருந்தாலும் ஷாஹின் அஃப்ரீடி போல் பெரிய அச்சுறுத்தலாகவெல்லாம் வீசுவதில்லை. ஷாஹின் அப்ரீடியினால் பாகிஸ்தான் கிரிக்கெட்டே எழுச்சிபெற்றுள்ளது.

    ஆகிப் ஜாவேத் கூறுவது போல் பும்ரா இப்போது கொஞ்சம் அச்சுறுத்தல் குறைவான பவுலராகவே திகழ்கிறார், ஆனால் ஷாஹின் அஃப்ரீடி, ஹாரிஸ் ராவுஃப் எல்லாம் இன்னும் பல இடங்களில் நிரூபிக்க வேண்டியுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா என்று சேனா நாடுகளில் ஷாஹின் ஷா அப்ரீடி எப்படி வீசுகிறார் என்று பார்க்க வேண்டியுள்ளது.

    பும்ரா வெளிநாடுகளில் அசத்திய பிறகே இந்தியாவுக்கு வந்து பந்து வீசினார். பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு எப்போதுமே டாப் இந்திய வீரர்களைக் கண்டால் வயிற்றெரிச்சல் அதிகமாகவே இருக்கும். ஆகிப் ஜாவேதின் இந்த கருத்தும் இந்த வகையைத்தான் சார்ந்ததே தவிர, அவரது மனவோட்டமே தவிர புறவயமான இதற்கெல்லாம் எந்த நிரூபணமும் கிடையாது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Jasprit bumrah, Shaheen Afridi

    அடுத்த செய்தி