இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக களம்காணும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த பும்ரா மற்றும் ஷிகர் தவன் ஆகிய முன்னணி வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக மூன்று டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தியாவில் நடைபெறும் இந்த போட்டிகளில் விராட் கோலி தலைமையில் ஆடும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
முதுகில் ஏற்பட்ட காயத்தால் கடந்த 2 தொடர்களில் ஆடாமல் இருந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பூரண குணமடைந்திருப்பதால், அணிக்கு மீண்டும் திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தொய்வைக் கண்டிருந்த பந்துவீச்சு பலமடையும்.
இதேபோல், காயம் காரணமாக ஓய்வில் இருந்த தொடக்க வீரர் ஷிகர் தவனும் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இதுபோல் கேரள விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பிடித்துள்ளார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் நீடிக்கிறார்.
இந்தியாவின் 'ஹிட் மேன்' ரோஹித் சர்மாவுக்கும், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கும் இலங்கை தொடரில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஜனவரி 14ல் துவங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் அணிக்குத் திரும்புவர் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
தீபக் சாஹர், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் காயத்திலிருந்து மீள நாட்கள் ஆகும் எனக்கூறப்படும் நிலையில், இரு தொடர்களிலும் விளையாட இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இரு தொடர்களிலும் மகேந்திர சிங் தோனிக்கு இடம்பெறாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணி
விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாகூர், வாஷிங்டன் பிரீத் சுந்தர்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணி
விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ரிஷாப் பந்த், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதிவ் ஷார்டுல் தாக்கூர், ஷமி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Team India