ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

''டாக்டர்களிடம் பேசினோம்.. நல்ல பதில் கிடைக்கல...'' பும்ரா காயம் குறித்து பேசிய கேப்டன் ரோஹித்!

''டாக்டர்களிடம் பேசினோம்.. நல்ல பதில் கிடைக்கல...'' பும்ரா காயம் குறித்து பேசிய கேப்டன் ரோஹித்!

ரோகித் சர்மா - பும்ரா

ரோகித் சர்மா - பும்ரா

பும்ராவுக்கு 28 வயது தான் ஆகிறது. இன்னும் அவர் பல ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார். -ரோகித்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

  16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியுள்ள நிலையில், நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை  23-ந்தேதி பாகிஸ்தானுடன் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகிறது.

  இதையடுத்து முன்கூட்டியே பெர்த் நகரில் இந்திய அணி தொடர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகினார். பும்ராவுக்கு மாற்று வீரராக இந்திய அணியில் முகமது ஷமி தேர்வு செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

  பும்ராவுக்கு பதிலாக டி20 உலககோப்பை அணியில் முகமது ஷமிக்கு இடம்: மேலும் 2 பேக்அப் பிளேயர்கள் ஆஸ்திரேலியா பயணம்

  பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது –

  பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள காயம் தொடர்பாக, நாங்கள் பல்வேறு மருத்துவர்களை ஆலோசித்தோம். ஆனால் அவர்களிடமிருந்து நல்லதொரு பதில் கிடைக்கவில்லை.

  இந்த உலககோப்பை முக்கியமானதுதான்; ஆனால் பும்ராவின் கெரியர் இன்னும் ரொம்ப முக்கியமானது. அவருக்கு 28 வயது தான் ஆகிறது. இன்னும் அவர் பல ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார்.

  எனவே நாங்கள் அவரது கெரியரில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. நாங்கள் பேசிய அனைத்து மருத்துவர்களும் அவருக்கு ஓய்வு தேவை என்ற ஒரே கருத்தைதான் சொன்னார்கள். வருங்காலங்களில் இந்தியாவுக்காக இன்னும் பல போட்டிகளில் விளையாடி பும்ரா வெற்றியைத் தேடித் தருவார்.

  தோனி தொடங்கி வைத்த வெற்றி! டி20 உலகக்கோப்பையில் இதுவரை வென்ற நாடுகள்!

  இந்த உலக கோப்பை தொடரில் அவரை மிஸ் செய்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். விளையாட்டைப் பொறுத்த வரையில் காயங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதிக ஆட்டங்களில் விளையாடும்போது காயங்கள் ஏற்பட்டு விடும். இந்த உலகக்கோப்பை தொடரில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இந்திய அணி கோப்பையை வெல்ல முயற்சிக்கும்.

  இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Cricket, T20 World Cup